Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் திணறிய பாகிஸ்தான்

கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் கடந்த மார்ச் மாதம் முதல் தள்ளிவைக்கப்பட்ட நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கடந்த மாதம் விளையாட தொடங்கியது. அதற்கு வெஸ்ட் இண்டீஸ் அணி சம்மதம் தெரிவித்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 2 – 1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது. அடுத்ததாக அயர்லாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இங்கிலாந்து சென்றது.

இதில் 2 – 1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாட கடந்த மாத இறுதியில் இங்கிலாந்து சென்றது. கடந்த ஒருவாரமாக பாகிஸ்தான் அணி பயிற்சியில் ஈடுபட்டு வந்தன. இந்நிலையில் இரு அணிக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஓல்ட் டிராஃபோர்ட்   கிரிக்கெட் மைதானத்தில்  கடந்த 5 ஆம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. சிறப்பாக விளையாடிய ஷான் மசூத் 156 ரன்கள் எடுத்தான் மூலம் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 109.3 ஓவர்களில் 326 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

தொடர்ந்து ஆடிய முதல் இன்னிங்க்சை தொடங்கிய இங்கிலாந்து அணி  219 ரன்களுக்கு சுருண்டது.  107 ரன்கள் முன்னிலை பெற்று இரண்டாம் இன்னிங்க்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 169 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 277 ரன்கள் வெற்றி இலக்காக பாகிஸ்தான் அணி நிர்ணயம் செய்துள்ளது.

Exit mobile version