Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

டோனி தான் என்னுடைய கனவு நாயகன்! பாகிஸ்தான் அணி வீரர்….

Pakistan cricket player hails MS Dhoni

உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக இந்திய அணியை வென்றது பாகிஸ்தான் அணி. இந்திய அணி நிர்ணயித்த 152 ரன்களை விக்கெட் இழப்பின்றி 18-வது ஓவரிலேயே எட்டி, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் ஆட்டம் முடிந்த பின்பு பாகிஸ்தான் வீரர்கள் பாபர் அசாம், சோயிப் மாலிக், இமாத் வாசிம் மற்றும் ஷாநவாஷ் டஹாணி ஆகியோர் தோனியை சந்தித்து பேசினர். அப்போது தோனியிடம் பாபர் கைக்குலுக்கிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.

எனினும், ஆட்டம் முடிந்த பின்பு, பாகிஸ்தான் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷாநவாஷ் டஹாணி வலைதளத்தில், “இந்த இரவு மறக்க முடியாதது. பாகிஸ்தானின் வெற்றி மற்றும் தன்னுடைய கனவு ஆட்டக்காரர் தோனியுடனான சந்திப்பு இந்த நாளை அருமையாக்கியுள்ளது” என பதிவிட்டிருந்தார். இதை கண்டு இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி பாகிஸ்தான் ரசிகர்களும் மகிழ்ந்த வண்ணம் உள்ளனர்.

ஏற்கனவே ஆட்டத்துக்காக பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, தோனி வருவதைக் கண்டதும்,
பாகிஸ்தானின் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஷாநவாஷ் டஹாணி தோனியிடம் சென்று, “நீங்கள் தோனி, என் பெயர் டஹாணி” எனவும் உங்களின் மிகப்பெரிய ரசிகர் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டார்.

மேலும், நீங்கள் மிகவும் ஃபிட்டாக உள்ளீர்கள் என கூற, தோனி தனக்கு வயதாகி விட்டது என சிரித்துக் கொண்டே கூறினார். அதற்கு டஹாணி, இல்லை, தற்போது தான் முன்பை விட வலிமையாக உள்ளீர்கள் என கூறினார். இந்தியாவைப் போன்றே பாகிஸ்தானிலும் தோனிக்கு அதிக ரசிகர்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version