Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கலக்கிய பாபர் & ரிஸ்வான்… நியுசிலாந்தை போட்டு தாக்கி பைனலுக்கு சென்ற பாகிஸ்தான்!

கலக்கிய பாபர் & ரிஸ்வான்… நியுசிலாந்தை போட்டு தாக்கி பைனலுக்கு சென்ற பாகிஸ்தான்!

நியுசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வென்றுள்ள பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், நியுசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நான்கு அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. இதில் பாகிஸ்தான் அணி கடைசி நேரத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் சொதப்பலால் உள்ளே வந்தது.

இந்நிலையில் இன்று முதல் அரையிறுதிப் போட்டி பாகிஸ்தான் மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையே  நடந்தது. இதில் டாஸ் வென்ற நியுசிலாந்து முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 152 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் மிட்செல் அரைசதம் அடித்தார்.

இதன் பின்னர் 153 ரன்கள் என்ற இலக்கோடு களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் இதுவரை சொதப்பி வந்த பாபர் ஆசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகிய இருவரும் அபாரமாக விளையாடி வெற்றியைத் தேடித் தந்துள்ளனர். இருவரும் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்துக் கலக்கினர்.

இதன் மூலம் கடைசி ஓவரின் முதல் பந்தில் பாகிஸ்தான் அணி இலக்கை எட்டியது. இந்த வெற்றியின் மூலம் முதல் ஆளாக இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது பாகிஸ்தான். நாளை நடக்கும் போட்டியில் வெல்லும் அணி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ளும்.

இந்தியா இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளது. இந்த தொடரில் இங்கிலாந்தை விட இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது. அதனால் இந்திய அணிக்கு நாளை வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது.

Exit mobile version