CRICKET: இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பாகிஸ்தானில் பங்கேற்கவில்லை என்றால் தொடரில் இருந்து விலகி விடுவோம் பாகிஸ்தான் வாரியம்.
சாம்பியன்ஸ் கோப்பை தொடர் வருகிற பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள நிலையில் போட்டியில் அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை.இதன் முக்கிய காரணமாக பார்க்கப்படுவது இந்திய அணி பாகிஸ்தானில் சென்று விளையாட மாட்டோம் என அறிவித்தது தான்.பிசிசி இந்தியன் விளையாடும் போட்டிகளை வேறு நாட்டில் நடத்துமாறு வலியுறுத்தியது.
தற்போது பாகிஸ்தான் வாரியம் அதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இந்திய அணி பாகிஸ்தானுக்கு வந்து விளையாடவில்லை என்றால் தாங்கள் இந்த தொடரில் இருந்து விலகி விடுவோம் என்று BCCI க்கு எச்சரிக்கை விடுத்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.
ஐசிசிக்கு மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த பிரச்சனையை தீர்க்க ஐசிசிஐ ஒரு திட்டத்தை திட்டி உள்ளது. பதில் இந்திய அணி பாகிஸ்தான் வராத பட்சத்தில் இந்த தொடர் முழுவதையும் தென்னாப்பிரிக்காவில் நடத்த திட்டமிட்டுள்ளது.
இதனால் இன்னும் ஒரு வாரத்தில் சாம்பியன்ஸ் கோப்பை தொடர்பான அட்டவணை வெளியிடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இந்தியாவுடன் போட்டிகளை வேறு நாட்டுக்கு மாற்றினால் ஐ சி சி மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்போம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது