Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பதுங்கி பாய்ந்த பாகிஸ்தான்… தென் ஆப்பிரிக்காவுக்கு கொடுத்த இமாலய இலக்கு!

பதுங்கி பாய்ந்த பாகிஸ்தான்… தென் ஆப்பிரிக்காவுக்கு கொடுத்த இமாலய இலக்கு!

தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் சூப்பர் 12 லீக் போட்டி தற்போது நடந்து வருகிறது.

சூப்பர் 12 லீக் போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் நிலைமை மிகவும் பரிதாபமாக உள்ளது. இதனால் இனிவரும் அனைத்துப் போட்டிகளையும் பாகிஸ்தான் அணி வெல்ல வேண்டும். அப்படி வென்றாலும், மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளை பொறுத்தே அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்புகள் இருக்கும்.

இந்நிலையில் இன்று தங்கள் நான்காவது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் ஆரம்பத்தில் விக்கெட்களை இழந்து தடுமாறியது. முதல் 10 ஓவர்க்ளில் 60 ரன்கள் சேர்த்து 4 விக்கெட்களை இழந்திருந்தது.

அதன்பின்னர் அந்த அணியின் இப்திகார் அகமது, முகமது நவாஸ் மற்றும் ஷதாப் கான் ஆகியோர் சிறப்பாக விளையாடி இறுதியில் 185 ரன்கள் என்ற இலக்கு நோக்கி நகர்த்தினர். இப்திகார் அகமது 35 பந்துகளில் 51 ரன்களும், ஷதாப் கான் 22 பந்துகளில் 52 ரன்களும் அதிரடியாக சேர்த்து கலக்கினர். இதனால் 150 ரன்கள் கூட வாரது என்ற நிலையில் இருந்து 185 என்ற இலக்கை நிர்ணயிக்க முடிந்தது.

தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் நிறைய கேட்ச்களை விட்டதும் ரன்கள் மளமளவென உயர காரணமாக அமைந்தது.  இந்த போட்டியில் வென்றால் மட்டுமே பாகிஸ்தான் அணி அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க முடியும் என்பதால் இரண்டாவது இன்னிங்ஸ் கூடுதல் பரபரப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version