cricket: இந்தியாவின் மிகபெரிய லீக் தொடர் ஐ பி எல் அதில் விலைபோகாத வீரர்களை கொண்டு பாகிஸ்தான் அணி PSL நடத்த திட்டம்.
இந்தியாவில் ஐ பி எல் தொடரி மிகபெரிய வெற்றி தொடராக அனைவரும் அனைத்து வருடமும் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் ஒரு போட்டி என்றால் அது IPL தான். இதனை தொடர்ந்து அனைத்து நாட்டிலும் இது போன்ற டி 20 தொடரை நடத்தி வருகின்றனர்.
பாகிஸ்தான் அணி இதுபோன்ற ஒரு தொடரை நடத்தி வருகிறது. பாகிஸ்தான் சூப்பர் லீக் என்ற தொடர். என்னதான் இந்த தொடர் நடைபெற்று வந்தாலும் இந்தியாவில் நடைபெறும் ஐ பி எல் இல் பத்தில் ஒரு பங்கு கூட வருமானம் கிடையாது.
இதனால் பாகிஸ்தான் திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. இந்தியாவில் ஐ பி எல் நடைபெறும் அதே நேரத்தில் பாகிஸ்தானில் PSL தொடரை நடத்த திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. IPL மெகா ஏலம் நடந்து முடிந்த பின் அதில் விலை போகாத வீரர்களை வைத்து அந்த போட்டியை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்துள்ளது.
அதன்படி பார்த்தால் டேவிட் வார்னர், , கேசவ் மகாராஜ், சாய் ஹோப், ஜானி பேர்ஸ்டோ, கேன் வில்லியம்சன், ஆதில் ரஷீத், அலெக்ஸ் கேரி இன்னும் முக்கிய வீரர்கள் ஐ பி எல் ஏலத்தில் வாங்கப்படவில்லை. இந்நிலையில் இவர்களை பாகிஸ்தான் அழைத்து வர முயற்சிகள் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.