இந்தியா இல்லை, எங்க டார்கெட்டே வேற: பாகிஸ்தான்

0
111
Pakistan targeting Newzealand in T20 Worldcup

பாகிஸ்தானில் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து T20 போட்டிகளில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தானுக்கு வந்த நியூசிலாந்து அணி, போட்டி தொடங்கும் முன்பு பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தானுடனான சுற்று பயணத்தை ரத்து செய்யப் போவதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

இதனையடுத்து பாகிஸ்தானில் இரு T20 போட்டிகளில் விளையாடவிருந்த இங்கிலாந்து அணியும் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்ய போவதாக அறிவித்தது.

இதனை அடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் மீது எங்களுக்கு எந்த கோபமும் இல்லை. எங்களின் கோபம் முழுவதும் பாகிஸ்தானில் கிரிக்கெட் தொடரை ரத்து செய்த நியூசிலாந்து மீது தான் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் கூறியுள்ளார்.

T20 உலகப் கோப்பைப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் இன்று மோத இருக்கின்றன. இதை முன்னிட்டு பாகிஸ்தானின் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் கூறியதாவது,

எங்களுடைய உண்மையான கோபம் நியூசிலாந்து அணியின் மீது தான். அவர்களை இந்த உலகக் கோப்பை போட்டியில் தோற்கடிக்க விரும்புகிறோம். இந்தியாவுடன் எங்களுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை என கூறினார். மேலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி மோதும் ஆட்டத்தில் இந்திய அணிக்கே அதிக அழுத்தம் இருக்கும். மைதானம் முழுக்க இந்திய ரசிகர்கள் நிறைந்து இருப்பார்கள்.அதனால் இந்தப் போட்டியில் தோல்வியை கண்டால் கூட எங்களுக்குப் பிரச்சினை இல்லை.

மேலும் ஒருவேளை பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து, 180 ரன்களுக்கு மேலே இலக்கு நிர்ணயித்து விட்டால் இந்திய அணிக்கு வெற்றி சாத்தியமல்ல. பாகிஸ்தானுக்கு எதிராக 180 ரன்களை எட்டி வெற்றி பெறுவது இந்திய அணிக்கு எளிதல்ல.

ஆட்டத்தில் பாகிஸ்தானை விடவும் இந்தியா நிலைமையை நன்கு கையாண்டால் நல்லது என கூறியுள்ளார்.