பாகிஸ்தான் இனிமேல் இந்திய மண்ணில் விளையாட கால் பாதிக்காது!! பிசிபி தலைவர் நக்வி அறிவிப்பு!!

0
94
Pakistan will no longer be able to play on Indian soil!! PCB Chairman Naqvi Announcement!!

இந்தியா-பாகிஸ்தான்: பாகிஸ்தான் சென்று ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட இந்தியா மறுப்பு.

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் வரும்  வருடம் நடைபெற இருக்கிறது. இருபினும்  பாகிஸ்தான் சென்று விளையாட இந்தியா மறுத்துவிட்டது. அதேவேளையில் தொடரை ஹைபிரிட்டாக நடத்த பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய பங்குகொள்ளவில்லை என்றால் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்ட் மற்றும் ஐசிசி-க்கு சுமார் 800 கோடி வருவாய் இழப்பு ஏற்ப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த தொடரை ஹைபிரிட் மாடலாக நடத்துங்கள் ஊக்கத்தொகை தருகிறோம் என ஐசிசி நிர்வாகம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்ததாக தகவல் வெளியானது. அதன் பின் நாளை ஐசிசி பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு முடிவு எடுக்க இருக்கிறது. அதன்பிறகு போட்டிக்கான அட்டவணை இறுதி செய்யப்படுகிறது. ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் நக்வி இனிமேல் பாகிஸ்தான் இந்தியா சென்று விளையாட வாய்ப்பில்லை என தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில் “இந்திய அதிகாரிகள் அவர்களுடைய கிரிக்கெட் அணியை பாகிஸ்தானுக்கு வந்து விளையாட அனுப்ப தயாராக இல்லாதபோது, இந்தியாவில் நடைபெறும் அனைத்து தொடர்களிலும் பாகிஸ்தான் சென்று விளையாட வாய்ப்பில்லை. இந்திய அணி பாகிஸ்தான் வர மறுப்பு தெரிவிக்கும்போது, பாகிஸ்தான் அணி மட்டும் இந்தியா செல்லும் சமநிலையற்ற சூழ்நிலையை நாங்கள் கொண்டிருக்க முடியாது. ஐசிசி உடனான கூட்டத்தில் என்ன நடந்தாலும் மக்கள் ஏற்றுக்கொள்ளும் நல்ல செய்திகள் மற்றும் முடிவுகளுடன் நாங்கள் வெளிவருவோம் என்று நான் உறுதியளிக்கிறேன்” என்றார்.