Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தோனியின் சாதனையை முறியடிப்பாரா ரிஷப் பண்ட்?

இந்திய அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை ஆரம்பிக்க இருக்கிறது.

இந்த சூழ்நிலையில், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் புதிய சாதனை ஒன்றை படைக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார்.

அதாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் கேட்ச் மற்றும் ஸ்டம்பிங் மூலமாக அவர் பேட்ஸ்மேனை 97 முறை ஆட்டமிழக்க செய்திருக்கிறார், அவர் இதனை 25 டெஸ்ட் போட்டிகளில் செய்திருக்கிறார்.

முன்னாள் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பராக இருந்த மகேந்திர சிங் தோனி 36 போட்டிகளில் இந்த சாதனையை படைத்திருக்கிறார். ரிஷப் பண்ட் தோனியின் இந்த சாதனையை தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் முறியடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

Exit mobile version