Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாராலிம்பிக்: இந்தியாவின் நிஷாட் குமார் வெள்ளி வென்றார்.

ஜப்பானில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக் போட்டிகளின் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் நிஷாட் குமார் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி ஜப்பானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெற்ற உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட நிஷாட் குமார் 2.06 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தை வென்றார். முதல் இடத்தைப் பிடித்த அமெரிக்க வீரர் 2.15 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கத்தை வென்றார். இந்த போட்டியில் கலந்து கொண்ட மேலும் ஒரு இந்திய வீரரான ராம்பால் சாகர் ஐந்தாவது இடத்தை பிடித்தார். வெள்ளி வென்ற நிஷாட் குமாருக்கு இந்தியாவின் சார்பாக பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் பிரதமர் மோடி தொலைபேசியில் அழைத்து நிஷாட் குமாருக்கு வாழ்த்து செய்தியை பரிமாறினார் அதேபோல் பிரபல பாலிவுட் நட்சத்திரங்கள் அனில்கபூர் அமிதாப் பச்சன் ஆகியோரும் நிஷாட் குமாருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். 22 வயதாகும் நிஷாட் ஹிமாச்சல் பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார். முன்னதாக (29.08.21) இன்று நடைபெற்ற டேபிள் டென்னிஸ் இறுதிப் போட்டியில் இந்தியாவின் சார்பாக பங்கேற்ற பாவினா வெள்ளி பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version