பாராட்டு மலையில் நனையும் பெரியார் பல்கலைக்கழக மாணவி! தங்க பதக்கம் வென்று சாதனை!யார் தெரியுமா..?
அகில இந்திய அளவிலான மகளிர் தடகள போட்டிகள் நடைபெற்றது . இதில் ஒடிசா மற்றும் புவனேஸ்வரம் பல்கலைக்கழகத்தில் தற்பொழுது நடைபெற்ற தடகளப் போட்டியில் பெரியார் பல்கலைக்கழக மாணவி வி.பவித்ரா கம்பு ஊன்றி தாண்டும் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் பெற்று நம் நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.
அதேபோல் பெங்களூரில் நடைபெற்ற கேலோ இந்தியா போட்டியிலும் மாணவி பவித்ரா முதலிடம் பிடித்துள்ளார். சாதனை படைத்த மாணவி பவித்ரா சேலம் ரயில்வே கோட்டத்தில் பணிவாய்ப்பும் கையோடு பெற்றுள்ளார்.
பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ள மனைவி பவித்ராவை பாராட்டி பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் இரா.ஜெகநாதன் மாணவிக்கு ரூ.10,000 ரொக்க பணமும் அவருக்கான சிறந்த சான்றிதழையும் வழங்கினார். இதைதொடர்ந்து பளுதூக்கும்பிரிவில் மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்ற மாணவி டி.ஹரிணி பிரியாவுக்கு ஊக்கத்தொகையாக ரூ 2000 பணம் வழங்கப்பட்டு சிறப்பித்தது.
இந்நிகழ்ச்சியில் பதிவாளர் தா.கோபி உடற்கல்வி இயக்குனர் கா.வெங்கடேசலம் அணி மேலாளர் எஸ்.கண்ணன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மேலும் அகில இந்திய தடகளப் போட்டியில் பெரியார் பல்கலைக்கழக மாணவி சாதனை படைத்தது அனைவரிடத்திலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மேலும் சாதனை படைத்த மாணவிகளுக்கு பல தலைவர்கள் பாராட்டியும் பரிசளித்தும் வருகின்றார்கள்.