Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சென்னை உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக 5 பேர் பதவியேற்பு!

#image_title

சென்னை உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக 5 பேர் பதவியேற்பு

சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக குடியரசு தலைவர் நியமித்ததை அடுத்து அவர்களுக்கு தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

வழக்கறிஞர்களாக இருந்த எஸ்.ஸ்ரீமதி, டி.பரத சக்கரவர்த்தி, ஆர்.விஜயகுமார், முகமது ஷபிக், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோரை சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக நியமித்து கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இதனையடுத்து அக்டோபர் 20ஆம் தேதி எஸ். ஸ்ரீமதி, டி.பரத சக்கரவர்த்தி, ஆர்.விஜயகுமார், முகமது ஷபிக் ஆகியோருக்கும், அக்டோபர் 28ஆம் தேதி ஜெ.சத்யநாராயண பிரசாத்தும் கூடுதல் நீதிபதிகளாக அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற பரிந்துரையை ஏற்று, கூடுதல் நீதிபதிளாக பதவி வகித்து வரும் 5 பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசு தலைவர் கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்படி இந்த 5 கூடுதல் நீதிபதிகளுக்கும் நிரந்தர நீதிபதிகளாக சென்னை உயர்நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா நேற்று பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

Exit mobile version