Cricket: மோசமான பேட்டிங் காரணமாக உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என கூறிய இந்திய முன்னாள் வீர்ர்.
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியில் விராட் கோலியின் மிகவும் மோசமான பேட்டிங் காரணமாக இந்திய அணி இந்தியா-நியூசிலாந்து இடையிலான இரண்டாவது போட்டியின் தோல்விக்கு காரணம். இதுகுறித்து கூறிய முன்னாள் வீரர் விராட் கோலியை உள்ளூர் போட்டிகளில் விளையாடுங்கள் என்று கூறினார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி தோல்வியடைந்தது.
இந்த தோல்விக்கு முக்கிய காரணம் இந்திய அணியின் மோசமான பேட்டிங் தான். 4 இன்னிங்ஸில் விளையாடிய விராட் கோலி முதல் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 70 ரன்கள் தவிர மற்ற இன்னிங்ஸில் மோசமான பேட்டிங்கை செய்தார். இதனால் சொந்த மண்ணில் 12 ஆண்டுகளாக தோல்வி அடையாத இந்திய அணியின் சாதனையை நியூசிலாந்து அணி தகர்த்துள்ளது.
விராட் கோலி 2 ஆண்டுகளாக சுழற்பந்து வீச்சாளர்களை மேற்கொள்வதில் கடினமாக உள்ளார். அதனால் இந்த தொடரின் போட்டிகளில் சுழற்பந்து வீச்சாளர்களிடம் விரைவாக தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதனால் நீங்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும், அவ்வாறு விளையாடுவது மூலம் மீண்டும் நன்றாக விளையாடுவார் என்று நம்புகிறேன் என்று முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.