Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விளையாடியது 4 போட்டிகள் ஆனால் சம்பளம் 14 கோடி!! அதிர்ந்து போன ஐ பி எல் அணிகள்!!

Played 4 matches but salary 14 crores

Played 4 matches but salary 14 crores

IPL: மயங்க யாதவ் இதுவரை 4 ஐ பி எல் போட்டிகளில் மட்டும் விளையாடியுள்ளார்.இந்த முறை அவருக்கு 14 கோடி சம்பளம்.

2024 ஆண்டுக்கான ஐ பி எல் தொடரில் லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணிக்காக உள்ளூர் வீரராக களமிறங்கிய மயங்க யாதவ் இந்த சீசனில் வெறும் 4 போட்டிகளில் மட்டும் விளையாடினார். இந்த நான்கு போட்டிகள் மட்டும் விளையாட காரணம் அவர் அந்த சீசனில் மட்டும் இரண்டு முறை காயமானார். அதனால் தொடர்ந்து அனைத்து போட்டிகளிலும் விளையாட முடியாமல் போனது.

அவர் வெறும் நான்கு ஐ பி எல் போட்டிகளில் விளையாடிய அனுபவதியா வைத்து இந்திய அணியில் இடம் பெற்றார் அந்த அளவிற்கு சிறப்பாக பந்து வீசினார். சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிரான டி 20 போட்டிகளில் இடம் பெற்று மூன்று போட்டிகளிலும் விளையாடினார்.நான்கு ஐ பி எல் போட்டி அனுபவத்தை வைத்து இந்திய அணியில் விளையாடி அசத்திவரும் நிலையில் ஐ பி எல் ஏலத்தில் இவரை எடுக்க அனைத்து அணிகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தற்போது இந்தியாவின் அதிவேக பந்து வீச்சாளராக இருக்கும் மயங்க யாதவ் விரைவில் இந்திய அணியின் முக்கிய நட்சத்திர வீரராக என்று எதிர்பார்ப்பு உள்ளது, அவரது அதிவேகம் எதிரணி பேட்ஸ்மேன்களை  திணற  வைப்பதாக முன்னாள் வீரர்கள் கூறி வருகின்றனர்.

தற்போது லக்னோ அணியின் ஆலோசகராக இருக்கும் இந்திய முன்னாள் வீரர் ஜாகிர் கான் மயங்க யாதவின் முக்கியத்துவத்தை அணி நிர்வாகத்திற்கு சுட்டி காட்டி இருப்பதாகவும் அவர் ஏலத்தில் விடப்பட்டால் அவரை எந்த அளவிற்கு ஏலம் எடுக்க படுவர் என்று யூகித்து 14 கோடி சம்பளம் அளிக்க பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது

Exit mobile version