Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

குறைந்த போட்டிகளில் 150 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள்!!! ஆறாவது இடம் பிடித்த ஆடம் ஜாம்பா!!!

#image_title

குறைந்த போட்டிகளில் 150 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள்!!! ஆறாவது இடம் பிடித்த ஆடம் ஜாம்பா!!!

குறைந்த போட்டிகளில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை கைப்பற்றிய சுழற்பந்து வீச்சாளர்களின் பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜாம்பா அவர்கள் 89 போட்டிகளில் 150 விக்கெட்டுகள் எடுத்து ஆறாவது இடத்தை பிடித்துள்ளார்.

உலகக் கோப்பை தொடரில் நேற்று(அக்டோபர்20) நடைபெற்ற லீக் சுற்றில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷின் அதிரடி சதங்களால் 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 367 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து 368 ரன்களை இலக்காக கண்டு களமிறங்கிய பாகிஸ்தான் அணி 45.3 ஓவர்களில் முடிவில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 305 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. இதன் மூலமாக ஆஸ்திரேலிய அணி உலகக் கோப்பை தொடரில் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

இதில் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜாம்பா பத்து ஓவர்கள் போட்டு 53 ரன்கள் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலமாக குறைந்த போட்டிகளில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்களின் பட்டியலில் இடம் ஜாம்பா அவர்கள் ஆறாவது இடம் பெற்றார்.

அதாவது ஆடம் ஜாம்பா அவர்கள் 89வது ஒருநாள் போட்டியில் நேற்று(அக்டோபர்20) விளையாடினார். இதில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியதை அடுத்து குறைந்த ஒருநாள் போட்டிகளில் விளையாடி 150 விக்கெட்டுகளை அதிவேகமாக கைப்பற்றிய வீரர்களின் பட்டியலில் ஆறாவது இடத்தை பிடித்துள்ளார்.

குறைந்த ஒருநாள் போட்டிகளில் விளையாடி அதிவேகமாக 150 விக்கெட்டுகளை கைப்பற்றிய சுழற்பந்து வீச்சாளர்களின் பட்டியலில் முதலிடத்தில் சக்லைன் முஸ்டக் அவர்கள் உள்ளார். இரண்டாவது இடத்தில் ரஷித் கான் அவர்களும் மூன்றாவது இடத்தில் அஜந்தா மென்டிஸ் அவர்களும் இருக்கின்றனர்.

குறைந்த ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை கைப்பற்றிய சுழற்பந்து வீச்சாளர்கள்…

1. சக்லைன் முஸ்டக் – 78 ஒருநாள் போட்டிகள்

2. ரஷித்கான் – 80 ஒருநாள் போட்டிகள்

3. அஜந்தா மெண்டிஸ் – 84 ஒருநாள் போட்டிகள்

4. குல்தீப் யாதவ் – 88 ஒருநாள் போட்டிகள்

5. இம்ரான் தாஹிர் – 89 ஒருநாள் பேட்டிகள்

6. ஆடம் ஜாம்பா – 89 ஒருநாள் போட்டிகள்

Exit mobile version