இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்த பிரதமர் மோடி குழப்பத்தில் மூழ்கிய பிசிசிஐ! 

0
243
PM Modi applied for the post of coach of the Indian cricket team, BCCI plunged into confusion!
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்த பிரதமர் மோடி குழப்பத்தில் மூழ்கிய பிசிசிஐ!
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு நாட்டு பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர் அமித்ஷா, எம்.எஸ் தோனி ஆகியோர்களின் பெயர்களில் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் வந்துள்ளதால் பிசிசிஐ குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது.
இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட் அவர்களின் பயிற்சிக் காலம் வரும் டி20 உலகக் கோப்பை தொடருடன் முடியவுள்ளது. இந்நிலையில் தலைமை பயிற்சியாளர் பதவிக் காலம் முடிந்த பின்னர் தன்னுடைய குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட விரும்புவதால் மீண்டும் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு போட்டியிட மாட்டேன் என்று ராகுல் டிராவிட் அவர்கள் கூறியுள்ளார்.
இதையடுத்து இந்திய அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளரை நியமிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. அந்த வகையில் இந்த மாதத் தொடக்கத்தில் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு ஒன்றை பிசிசிஐ வெளியிட்டு இருந்தது.
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க உதவும் கூகுள் படிவத்தை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பகிர்ந்த பிசிசிஐ மே 27ம் தேதி தான் இந்திய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் என்றும் குறிப்பிட்டு இருந்தது.
இதையடுத்து பிசிசிஐ-க்கு இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு 3000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு அனுப்பப்பட்டு உள்ளது. இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் சச்சின் தெண்டுல்கர், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர்களின் பெயர்களில் பல போலி விண்ணப்பங்கள் வந்துள்ளது. இதையடுத்து பிசிசிஐ இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் “இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு கூகுள் படிவங்கள் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தது. அது எதற்காக ஒரே படிவத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டது என்றால் ஒரே தாளில் எளிமையாக வகைபடுத்தி விடலாம் என்பதற்காகவும் தேவைப்படும் திறன்களை எளிமையாக அறிந்து கொள்ள முடியும் என்பதற்காக மட்டும் தான்.
ஆனால் இந்திய நாட்டு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, சச்சின் தெண்டுல்கர், மகேந்திரசிங் தோனி ஆகியேர்களின் பெயர்களில் விண்ணப்பங்கள் வந்துள்ளது. கடந்த முறை தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்தவுடன் இதே போலத்தான் நடந்தது. இந்த முறையும் அதே கதை தான் தொடர்கின்றது” என்று பிசிசிஐ அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
விண்ணப்பங்கள் ஒருபுறம் இருக்க பிசிசிஐ சில முன்னாள் வீரர்களுடன் முக்கியமான பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில் அந்த நபர்களில் ஒருவர் இந்திய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு இறுதி செய்யப்படலாம் என்று தகவல் கிடைத்துள்ளது. மேலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பயிற்சியாளராக இருக்கும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட்டர் கவுதம் கம்பீர் அவர்கள் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.