பாரதிய ஜனதா கட்சி எம்பிக்களுக்கு பிரதமர் மோடி திடீர் உத்தரவு !!
கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் அகில இந்திய அளவில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியை பிடித்தது, அன்று முதல் கடந்த 2019ம் ஆண்டு வரை பல்வேறு அரசு ரீதியான முடிவுகள் மக்கள் மத்தியில் ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டாலும், மீண்டும் 2019 ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்தது.
அன்று முதல் இன்று வரை ஆட்சி அதிகாரத்தில் ஒன்பது ஆண்டுகளாக அமர்ந்துள்ளது, இந்த நிலையில் பல்வேறு சர்ச்சைகள் பாரதிய ஜனதா ஆட்சியை சுற்றி வந்தாலும், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், மீண்டும் அடுத்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கு தயாராகும் படி கட்சியினருக்கு கட்சி மேலிடம் அவப்போது அறிவுறுத்தி வருகிறது.
இந்நிலையில் இன்று பிரதமர் மோடி தலைமையில் பாரதிய ஜனதா கட்சியின் எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய பிரதமர் மோடி, எம்பிக்கள் அனைவரும் தங்கள் தொகுதியில் வருகின்ற மே மாதம் 15ம் தேதி முதல் ஜூன் 15 தேதி வரை, கடந்த ஒன்பது ஆண்டுகளில் பாரதிய ஜனதா ஆட்சியில் மக்களுக்கு செய்யப்பட்ட நலத்திட்டங்கள் மற்றும் சாதனைகள் பற்றி, பொது கூட்டம் வாயிலாக மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என கூறினார்.
மேலும் வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் மாபெரும் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சி கட்டிலில் அமர வைக்க வேண்டும் என கூறியதாக பாஜக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன