போலீஸ் -க்கும் ரூல்ஸ் இருக்கிறது!! கைது செய்ய கடைபிடிக்க வேண்டிய 11 விதிமுறைகள்!!

0
177

போலீஸ் -க்கும் ரூல்ஸ் இருக்கிறது!! கைது செய்ய கடைபிடிக்க வேண்டிய 11 விதிமுறைகள்!!

சட்டப்படி காவல்துறையினர் ஒருவரை கைது செய்யக்கூடாது அவ்வாறு கைது செய்தால் அதற்கு 11 விதிமுறைகள் உள்ளது என்பதை 1997 இல் நடந்த ஒரு வழக்கில் சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

1. காவல்துறையினர் ஒருவரை கைது செய்யும்போது அவருடைய பெயர் சீருடையில் தெளிவாக தெரியுமாறு வைத்திருக்க வேண்டும்.

2. கைது செய்யும் போது கைது குறிப்பு என்பதில் கைது செய்யப்பட்ட தேதி நேரம் முதலியவற்றை குறிப்பிட்டு குற்றவாளியின் கையெழுத்தை அதில் போட வேண்டும்.

3. ஒருவரை கைது செய்து விட்டால் அவருடைய குடும்பத்தாருக்கு இந்த செய்தியை காவல்துறையினர் கண்டிப்பாக கூற வேண்டும்.

4. கைது செய்யப்பட்டவரின் உறவினர்கள் வேறு மாவட்டத்தில் இருக்கிறார்கள் என்றால் எட்டு மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரத்திற்குள் இந்த தகவலை அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

5. ஒருவேளை கைது செய்யப்பட்டவரின் உறவினர்கள் இருக்கும் இடத்தை காவல்துறையினரால் அறிய முடியாத பட்சத்தில் கைதியிடம் சென்று இந்த செய்தியை உன் உறவினரிடம் நீயே கூறு என்று அவருக்கான உரிமையை தர வேண்டும்.

6. ஒருவரை எங்கு கைது செய்து வைத்திருக்கிறோம் யாரின் தலைமையின் கீழ் கைது செய்து வைத்திருக்கிறோம் என்பதை ஜென்ரல் டைரி என்பதில் காவல்துறையினர் பதிவு செய்திருக்க வேண்டும்.

7. ஒருவரை கைது செய்யும் போது அவரின் அங்கு அடையாளங்களை பற்றி தெரிந்து இன்ஸ்பெக்ஷன் மெமோ என்பதில் பதிவு செய்ய வேண்டும். இதில் கைது செய்தவரும் கைது செய்யப்பட்டவரும் கையெழுத்திட்டிருக்க வேண்டும். மேலும் இந்த மெமோவின் ஒரு நகலை கைது செய்யப்பட்டவருக்கு காவல்துறையினர் அளித்திருக்க வேண்டும்.

8. ஒருவரை கைது செய்து விசாரித்துக் கொண்டிருக்கும் போது அவரை 48 மணி நேரத்திற்கு ஒருமுறை மருத்துவரிடம் அழைத்துச் சென்று உடம்பை பரிசோதிக்க வேண்டும்.

9. மேலே குறிப்பிட்ட அனைத்து பத்திரங்களையும் சம்பந்தப்பட்ட நீதிபதிக்கு காவல்துறையினர் அனுப்பி இருக்க வேண்டும்.

10. கைது செய்யப்பட்டவர் வழக்கறிஞரிடம் பேச விரும்பினால் காவல்துறையினர் அதை தடுக்க கூடாது.

11. ஒருவரை கைது செய்து எங்கு வைத்திருக்கிறோம் எங்கு வைத்து விசாரணை செய்து கொண்டிருக்கிறோம் என்கின்ற விவரத்தை 12 மணி நேரத்திற்குள் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்திருக்க வேண்டும்.