போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டங்கள்!! எந்த திட்டத்தில் எவ்வளவு வட்டி கிடைக்கும் தெரியுமா??

0
101

போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டங்கள்!! எந்த திட்டத்தில் எவ்வளவு வட்டி கிடைக்கும் தெரியுமா??

மத்திய அரசு ஆனது பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு செய்து வருகின்றது. அந்த வகையில் ஏழை எளிய மக்களும் சாமானிய பொது மக்களும் நலன் பெற வேண்டும் என்று ஒரு சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது.

இந்த வகையில் சாமானிய மக்கள் தங்கள் சம்பாதிக்கும் பணத்தை எவ்வாறு சேமிப்பது என்று பல்வேறு குழப்பத்தில் இருப்பார்கள்.

வங்கிகளில் சென்று சேர்த்து வைக்கலாம் என்றால் அது அவர்களுக்கு லாபம் தரும் வகையில் இல்லை. அதனால் சாமானிய மக்கள் தங்களது பணத்தை லாபம் தரும் வகையில் தபால் அலுவலக திட்டத்தில் சேமிக்கலாம்.

இந்த வகையில் சேமித்தால் மட்டும் லாபம் கிடைக்குமா என்று கேட்டீர்களா கட்டாயம் கிடைக்கும்.இந்த தபால் அலுவலக திட்டத்தின் மூலம் நான் ஒன்றிற்கு ரூ.133 செலுத்தி வந்தால் ரூ.3 லட்சம் வரை சேமிக்கலாம்.

தபால் அலுவலகம் ரெக்கரிங் டெபாசிட் (RD) இதன் மூலம் நீங்கள் செலுத்தப்படும் பணத்திற்கான வட்டி அதிகரிக்கப்பட்டு உங்களது வருமானமும் அதிகரிக்கும்.

இதன் மூலம் ஏழை எளிய மக்களும் நடுத்தர வர்க்கத்தினரும் அதிக லாபம் பெறலாம். இனி சேமிக்க நினைப்பவர்கள் எல்லாம் தபால் அலுவலக திட்டத்தில் சேமிக்க விரும்புவார்கள். இந்த முறை மிகவும் பாதுகாப்பாக முதலீடு செய்ய அமைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் சிறிய அளவுத் தொகையை செலுத்தினால் கூட ஆண்டின் இறுதியில் அதிக லாபம் தந்து பெரிய தொகையை உங்களால் பெற முடியும்.

சமீபத்தில் அரசானது 6.2ல் இருந்த வட்டி வீதத்தை 6.5 ஆக உயர்த்தியுள்ளது.நீங்கள் இவ்வாறு சேமிக்க தொடங்கப்படும் கணக்கானது வயது முதிரும் வரை சேமிக்கலாம்.

ஒவ்வொரு மாதமும் டெபாசிட் தொகையாக ரூ.2000 செலுத்தினால் முதிர்வு தொகையாக ரூ.1,41,983 பெறலாம்.

இதற்கான ஆண்டு வைப்புத் தொகை ரூ. 24,000 ஆகும். 5 வருட காலப்பகுதியில், மொத்த வைப்புத்தொகை ரூ. 1,20,000, கூடுதல் வட்டியுடன் ரூ. 21,983. முதிர்வுத் தொகை ரூ. 1,41,983 கிடைக்கும்.

இதனைப் போன்றுஒவ்வொரு மாதமும் டெபாசிட் தொகையாக ரூ.3000 செலுத்தினால் முதிர்வு தொகையாக ரூ.2,12,973 பெறலாம்.

இதற்கான ஆண்டு வைப்புத் தொகை ரூ. 36,000 ஆகும். 5 வருட காலப்பகுதியில், மொத்த வைப்புத்தொகை ரூ. 1,80,000, கூடுதல் வட்டியுடன் ரூ. 32,972. முதிர்வுத் தொகை ரூ. 2,12,971. கிடைக்கும்.

அடுத்ததாக ஒவ்வொரு மாதமும் டெபாசிட் தொகையாக ரூ.4000 செலுத்தினால் முதிர்வு தொகையாக ரூ.2,83,968 பெறலாம்.

தினசரி ரூ.133 செலுத்தினால் 5 வருட காலப்பகுதியில், மொத்த வைப்புத்தொகை ரூ. 2,40,000, கூடுதல் வட்டியுடன் ரூ. 43,968. முதிர்வுத் தொகை ரூ. 2,83,968. கிடைக்கும்.

இவ்வாறு வெவ்வேறு முறையில் தொகைகளை செலுத்துவதன் மூலம் அந்த முதிர்வு ஆண்டில் அதற்கான வட்டியுடன் சேர்த்து வைப்புத் தொகையை பெற்றுக்கொள்ளலாம்.