தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான பயிற்சி போட்டி!!! நியூசிலாந்து அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!!!

0
75
#image_title

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான பயிற்சி போட்டி!!! நியூசிலாந்து அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!!!

நேற்று(அக்டோபர்2) நடைபெற்ற உலகக் கோப்பை தொடருக்கான பயிற்சி போட்டியில் நியூசிலாந்து அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நேற்று(அக்டோபர்2) நடைபெற்ற உலகக் கோப்பை பயிற்சி போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் பேட்டிங் செய்தது. நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன் டேவிட் கான்வென்ட் மற்றும் டாம் லேதம் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தால் நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் எடுத்தது.

நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக கான்வென்ட் அரைசதம் அடித்து 78 ரன்களும் டாம் லெதர் அரைசதம் அடித்து 52 ரன்களும் எடுத்தனர். கிளென் பிலிப்ஸ் 43 ரன்கள் சேர்த்தார். தென்னாப்பிரிக்க அணியில் லுங்கி இங்கிலாந்து மற்றும் மார்க் ஜென்சன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதையடுத்து 322 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அண பேட்டிங் செய்ய தொடங்கியது. தென்னாப்பிரிக்க அணி விளையாடும் பொழுது மழை குறுக்கிட்டது. அதிக நேரம் மழை பெய்தது. மழை நின்ற பிறகு டக்வெர்த் லீவிஸ் முறைப்படி 50 ஓவர்கள் போட்டி 37 ஓவர்கள் குறைக்கப்பட்டு 219 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணியில் குயின்டன் டிகாக் அதிரடியாக விளையாடினார். அவருடன் ஜோடி சேர்ந்த ராசி வண் டர் டுசேன் அவர்களும் சிறப்பாக விளையாடினர். இறுதி வரை அதிரடியாக விளையாடிய குயின்டன் டிக்காக் அரைசதம் அடித்தார். இருந்தும் தென்னாப்பிரிக்கா அணியால் 37 ஓவர்களின் முடிவில் 211 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதனால் நியூசிலாந்து அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென்னாப்பிரிக்க அணியில் வெற்றிக்காக இறுதி வரை போராடிய குயின்டன் டிக்காக் அரைசதம் அடித்து 84 ரன்கள் எடுத்தார். ராசி வெண் டர் டுசேன் அரைசதம் அடித்து 51 ரன்களும் ஹென்றிச் கிளாசன் 39 ரன்களும் எடுத்தனர்.

7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணியில் டிரெண்ட் பெல்ட் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மிட்செல் சேன்ட்னர், இஷ் சோதி ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.