இன்று தொடங்கவிருக்கும் பிரதோஷம்!! மலை கோவிலுக்கு செல்ல 4 நாட்கள் அனுமதி!!

0
92
Pradosha to start today!! 4 days permission to go to hill temple!!

இன்று தொடங்கவிருக்கும் பிரதோஷம்!! மலை கோவிலுக்கு செல்ல 4 நாட்கள் அனுமதி!!

விருதுநகர் மாவட்டடத்தில் அமைந்துள்ள சுந்தர மகாலிங்கம் கோவிலில்  பௌர்ணமியை முன்னிட்டு பிரதோஷம் நடத்தப்பட திட்டமிட்டப்பட்டிள்ளது.இது ஒவ்வொரு ஆடி பிறப்பின் பொழுதும் கட்டாயம் நடத்தப்படுகின்ற ஒரு நிகழ்வு ஆகும்.

அதனை போன்று வருகின்ற பௌர்ணமியில் சுந்தர மகாலிங்கம் கோவிலில் பிரதோஷம்  நடத்தப்பட உள்ளது. இந்த பிரதோஷமானது  இன்று தொடங்கி 18 ம் தேதிவரை நடைபெற உள்ளதாக கூறப்படுகின்றது. இந்த விழா தொடர்ந்து 4 நாட்களுக்கு விமர்சையாக நடைபெற உள்ளது.

இவ்வாறு இருக்கும்  கோவிலில் அம்மனை தரிசிப்பதற்கு அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். இதனால் அதிக அளவில் பக்தர்கள் கோவில்களுக்கு செல்லுவார்கள்.மேலும் கோவிலுக்கு    செல்ல இந்த நாள் மிகவும் உகர்ந்த நாள் என்பதால் பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் இருக்கும்.

இந்தநிலையில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் காவல் துறையினர் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.

பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருப்பதால் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பபட்டிருந்தது.அவர்கள் கோரிக்கை நிறைவேற்றும் விதமாக அதற்கான வசதியும் செய்யப்பட்டு வருகின்றது.

இந்த சிறப்பு நிகழ்வானது இன்று காலை 7  மணிக்கு தொடங்கி 12 மணி வரை நடைபெற உள்ளது.இதில் அம்பாள் சன்னதிக்கு எதிரில் கொடிமரம் ஏற்றப்பட்டு திருவிழா கோலாகலமாக தொடங்கியது.

விழா சிறப்பாக தொடங்கப்பட்டதால் பக்தர்கள் அனைவருக்கும்  மலை மேல் ஏறி தரிசிபதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சில கட்டுபாடுகளை கோவில் நிறுவனம் விதித்துள்ளது.

அந்த வகையில் கோவில் மலை மேல் உள்ள ஓடைகளில் குளிக்க பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகின்றது.அதனை தொடர்ந்து பக்தர்கள் இரவு நேரங்களில் கோவிலில் தங்க அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் கூறியுள்ளது. மேலும் குழந்தைகளும் பெரியவர்களும் மலை மேல் ஏறி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்படுகின்றது.