முதல் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை!! மாணவர்களே இதை மிஸ் பண்ணிடாதீங்க!!
தமிழக அரசானது மாணவ மாணவிகளுடைய நலனையும் அவர்களின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு அவர்களுக்காக தினம் தினம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டங்களால் மாணவர்கள் பலரும் பயன் பெற்று வருகின்றனர். அந்த வகையில் தற்போது தமிழக அரசானது மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது இனி அரசு பணியிடங்களில் வீட்டின் முதல் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கரோனா நம் நாட்டில் மிகவும் பரவி வந்தது.
இதனால் ஏராளமான மக்கள் உயிரிழந்தனர். இந்த கரோனா நோயால் தனது பெற்றோர்களை இழந்த மாணவர்களுக்கு அரசு பணியிடங்களில் முன்னுரிமை வழங்கப்படும்.
மேலும், படித்துவிட்டு வேலையில்லாமல் சிரமப்படும் இளைஞர்களுக்கும், அரசு பள்ளிகளில் தமிழ்மொழியில் பயின்ற மாணவர்கள் என அனைவருக்கும் இந்த அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க சான்றிதழ் வழங்க இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே படித்துவிட்டு வேலையில்லாமல் சிரமப்படும் இளைஞர்களுக்காக மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது இந்த முதல் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த சான்றிதழ்கள் உடனடியாக முதல் பட்டதாரிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்று அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
எனவே மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து முதல் பட்டதாரிகளும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வாழ்கையில் முன்னேறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.