பாரா ஒலிம்பிக் வீரருக்கு அறிவித்த பரிசு தொகை! பல வருடங்கள் ஆகியும் இன்னும் கைக்கு வராத அவல நிலை!
ஒவ்வொரு வருடமும் ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும். அதில் வெற்றிபெறும் வீரர்களுக்கு அம்மாநில அரசுகளும் அவர்களது தகுதியை பொறுத்து சிறப்பு பதவிகளும், சிறப்பு கௌரவங்களும் வழங்கும். கடந்த 2016 ஆம் ஆண்டு ஒரு ரியோ பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது.
அதில் லக்னோவைச் சேர்ந்த வருண் சிங் பாட்டி உயரம் தாண்டுதலில் வெண்கலப்பதக்கம் வென்றார். இந்த ஆண்டும் இவர் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டார். ஆனால் 6 வது இடம் பெற்றதன் காரணமாக பதக்க வாய்ப்பை தவற விட்டார். இவர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் பெற்ற வெண்கலப் பதக்கத்தை கௌரவிக்கும் விதமாக உத்திரப்பிரதேச அரசு இவருக்கு பரிசுத்தொகையாக மட்டும் ஒரு கோடி ரூபாயை அறிவித்தது.
ஆனால் அந்த பரிசு தொகையை இன்னும் அவருக்கு உ.பி அரசு வழங்கவில்லை என அவரது மனைவி திடீர் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது மனைவியான சினேகா பாட்டி ஒரு தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவ்வாறு குறிப்பிட்டிருந்தார். மேலும் அவர் இது பணத்தைப் பற்றிய விஷயம் மட்டும் இல்லை.
இந்த ஆண்டு ஜனவரியில் கூட அவருக்கு வேலை வழங்கப்படும் என்று அரசால் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த முயற்சியும் அரசு செய்யவில்லை. நாங்களும் தொடர்ந்து கடிதங்கள் எழுதி முறையீடு செய்து வருகிறோம். அவர்கள் எங்களை அலுவலகத்திற்கு அழைத்து பேசுகிறார்கள். மீண்டும் மீண்டும் எங்களை கடிதம் போடச் சொல்கிறார்கள். ஆனால் பணம் மட்டும் இன்னும் வந்து சேரவில்லை என்று அவர் மிகுந்த வருத்தம் தெரிவித்து கூறியிருந்தார்.