Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தோனியின் விவசாய பண்ணையை பார்வையிட மூன்று நாட்களுக்கு பொதுமக்களுக்கு அனுமதி!

தோனியின் விவசாய பண்ணையை பார்வையிட மூன்று நாட்களுக்கு பொதுமக்களுக்கு அனுமதி!

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த தோனி தற்போது ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரில் தோனி சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். தோனியின் சொந்த ஊரான ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் அவருக்கு சொந்தமாக விவசாய பண்ணை உள்ளது.

தனது ஓய்வை அறிவித்த பிறகு, தோனி தனது பண்ணை வீட்டில் விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பண்ணையில் 10 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் டிராகன் பழம், தண்ணீர் பழம், முலாம் பழம், பட்டாணி, பச்சை மிளகாய், தக்காளி, பப்பாளி மற்றும் ஸ்டிராபெர்ரி ஆகியவைகளை விளைவித்து வருகிறார்.

மேலும், இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட உரத்தின் மூலமே தோனி தனது விவசாயத்தை செய்து வருகிறார். இந்த நிலையில், ஹோலி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் பார்வைக்காக மூன்று நாட்களுக்கு இந்த விவசாய பண்ணை திறக்கப்பட உள்ளது. இதுகுறித்து தோனியின் வேளாண் ஆலோசகரான ராஷன் குமார் கூறுகையில்,

ஹோலி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் பார்வைக்காக இந்த பண்ணையை மூன்று நாட்களுக்கு திறக்க முடிவு செய்துள்ளோம்.  இதன்மூலம் இங்கு விவசாயம் எப்படி நடைபெறுகிறது என்று மக்கள் கண்டு, அறிந்து கொள்ள முடியும்.  இதனால், விவசாயம் பற்றிய அறிவை பரப்பவும் முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

இங்கு பார்வையிட வரும் மக்கள் பண்ணையில் இருந்து நேரடியாக பசுமையான காய்கறிகளை பறித்து செல்லலாம் என தெரிவித்துள்ளார். மேலும், ஒரு ஸ்டிராபெர்ரி பழப்பெட்டியை விலைக்கு வாங்குபவர்களுக்கு மற்றொரு ஸ்டிராபெர்ரி பழப்பெட்டி இலவசமாக வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

Exit mobile version