Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிரதமர் மோடிக்கு பகிரங்க கொலை மிரட்டல்!! பரபரப்பில் டெல்லி கோட்டை!!

#image_title

பிரதமர் மோடிக்கு பகிரங்க கொலை மிரட்டல்!! பரபரப்பில் டெல்லி கோட்டை!!

சமீப காலமாக தலைவர்கள், மக்கள் அதிக அளவில் இருக்கும் பொது இடங்கள் என மையமாக வைத்து பல ஆசாமிகள் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு கூட குண்டு வெடிப்பு குறித்து மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.

மேற்கொண்டு காவல்துறையினர் இது குறித்து நடவடிக்கையும் எடுத்து வந்தனர். இவ்வாறு இருக்கும் சூழலில் அவ்வபோது நடிகர் நடிகை மற்றும் கட்சியில் உயர் பதவியில் இருக்கும் நிர்வாகிகள் என அனைவருக்கும் கொலை மிரட்டல் வருவது சகஜம் தான்.

அந்த வரிசையில் தற்பொழுது பிரதமர் மோடி சிக்கி உள்ளார். டெல்லி காவல்துறை கட்டுப்பாட்டிற்கு, ஆசாமி ஒருவர் அழைப்பு விடுத்து ஒரு கோடி தரவில்லை என்றால் மோடியை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி உள்ளார்.

சிறிது நேரம் கழித்து அதே ஆசாமி மீண்டும் தொடர்பு கொண்டு இரண்டு கோடி தரவில்லை என்றால் அமித்ஷாவையும் சேர்த்து கொலை செய்து விடுவேன் என கூறியுள்ளார்.

இவ்வாறு ஆசாமி கூறியது காவல்துறையினர் இடையே சற்று பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த ஆசாமி யார் என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.

இந்த விசாரணையில் தொலைபேசியில் தொடர்பு கொண்டது போதை ஆசாமி என தெரியவந்தது. இவ்வாறு அவ்வபோது முகம் தெரியாத ஆசாமிகளின் செயலால் காவல்துறையினரின் நேரம் வீணாகுவதுடன் சற்று பரபரப்பையும் ஏற்படுத்தி விடுகிறது.

Exit mobile version