Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மும்பை இந்தியன்ஸ் வீரருக்கு தண்டனை! பதில் அளித்த அணி நிர்வாகம்!!

#image_title

மும்பை இந்தியன்ஸ் வீரருக்கு தண்டனை! பதில் அளித்த அணி நிர்வாகம்!
மும்பை இந்தியன்ஸ் வீரர் நேஹால் வதேரா அவர்களுக்கு அணி நிர்வாகம் வித்தியாசமான தண்டனையை வழங்கியுள்ளது. நேஹால் வதேரா அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை குறித்து மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் பதில் அளித்துள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் தொடக்கத்தில் மோசமாக விளையாடி பிறகு படிப்படியாக சூப்பராக விளையாடி வரும் மும்பை இந்தியன் அணி 12 போட்டிகளில் விளையாடி 7 வெற்றிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இன்று நடக்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறும். மேலும் பிளே ஆப் சுற்றுக்கும் முன்னேறும்.  இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் நேஹால் வதேரா அவர்களுக்கு வழங்கப்பட்ட வித்தியாசமான தண்டனை இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மும்பை அணி வீரர் நேஹால் வதேரா அவர்கள் இன்று கால்களில் பேட்டிங் பேட் அணிந்து கொண்டு விமான நிலையத்திற்கு வந்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இதற்கு மும்பை இந்தியன்ஸ் அணி விளக்கம் அளித்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் வீரர்களுடனான ஆலோசனைக் கூட்டத்திற்கு நேஹால் வதேரா அவர்கள் தாமதமாக வந்ததால் கால்களில் பேட்டிங் பேட் அணிந்து இருக்க வேண்டும் என்று வினோத தண்டனையை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் அளித்துள்ளது. வீரர்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக மும்பை அணி கூறியுள்ளது. இவரை போல தாமதமாக வந்த ஹிருத்திக் ஷோக்கீன், அர்ஷத் கான் இருவருக்கும் கால்களில் பேட்டிங் பேட் அணியும்படி மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தண்டனை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
Exit mobile version