இந்திய அணி தற்போது 5 வது டெஸ்ட் போட்டிக்கான தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இந்திய அணிக்கு உலக டெஸ்ட் கோப்பைக்கு இந்துதான் கடைசி வாய்ப்பாக பார்க்கபடுகிறது. எனவே இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே தென்னாபிரிக்க அணி இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக சென்றது.
இந்நிலையில் கடைசியாக மெல்போர்னில் நடைபெற்ற 4 வது போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. ஆஸ்திரேலிய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி முக்கிய வீரர்கள் விக்கெட்டுகளை இழந்த நிலையில் ரிஷப் பண்ட் தேவை இல்லாத ஷாட் அடித்து சிக்ஸ் அடிக்க முயன்று விக்கெட் இழந்தார். இது அவர் மீது சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில் டிரெஸ்ஸிங் ரூமில் பேசிய கம்பீர் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரையும் ஏதும் சொல்லாமல் இளம் வீரர்களை மட்டுமே குறிவைத்து கடுமையாக பேசியுள்ளார். இந்நிலையில் ரிஷப் பண்ட் அடித்த ஷாட் குறித்து கடுமையாக சாடியுள்ளார். இந்நிலையில் அடுத்த 5 வது போட்டியில் ரிஷப் பண்ட் நீக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை இந்திய ரசிகர்கள் ரோஹித் மற்றும் விராட் க்கு கம்பீர் முட்டு கொடுக்கிறார் என்று சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.