சும்மா இருந்த பாக்கியாவை உசுப்பிவிடும் ராதிகா!! வேடிக்கை பார்ப்பதையே வேலையாக வைத்திருக்கும் கோபி!!
விஜய் டிவியில் தற்பொழுது ஒளிபரப்பாகும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த தொடரை பார்பதற்கு என்றே ஒரு கூட்டம் உள்ளது. சீரியல் பார்க்க பிடிக்காதவர்கள் கூட இந்த தொடரை பார்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த சீரியலில் கோபி என்கிற கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த கதாபாத்திரமானது இரண்டு மனைவிகளை வைத்து சமாளிக்க முடியாமல் திண்டாடுவது போன்று அமைந்திருக்கும்.
இப்பொழுது இன்னும் சற்று சுடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.அந்த வகையில் கோபி தான் கட்டிய வீட்டை விட்டு பாகியாவை வெளியேற சொன்னதும் அதற்கு பாக்கிய அந்த வீட்டிற்கான பணத்தை முழுவதும் தர போவதாக கூறி இருந்தார்.
அதற்காக பாக்கியாவிற்கு ஒரு மாதம் கால அவகாசம் கொடுத்த கோபி,அந்த சவாலை ஏற்றுக்கொண்ட பாக்கியா. அதன்பிறகு பழனிசாமியின் உதவியால் பாக்கியாவிற்கு ஒரு பெரிய ஆர்டர் கிடைத்தது.
இதன் மூலம் அவருக்கு ஒரே நாளில் 7 லட்சம் கிடைத்தது.மீதம் உள்ள பணத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பிய பாக்கியா தவித்த நிலையில் இருந்தார்.
ஆனால் பாக்கிய எப்படியோ பணத்தை தயார் செய்து கோபியின் மூஞ்சில் விட்டு எறிந்தார். பின்னர் அவமானம் தாங்க முடியாமல் ராதிகாவும் கோபியும் பேட்டி படுக்கையை எடுத்து கொண்டு வீட்டை விட்டு வெளிய வந்தனர்.
அதன் பிறகு ராதிகா இத்தனை நாள் உங்களுக்கு மட்டும் தான் எதிரியாக இருந்தார்.இனிமேல் பாக்கியாவிற்கு எதிரி நான்தான் என்று ஆவேசமாக பேசுகிறார்.
பின்னர் பாக்கிய இந்த வீட்டை உங்களது பெயரில் எழுதி கொள்ளுங்கள் என்று மாமனாரிடம் கூறுகின்றார்.
இனிமேல் ராதிகா தன்னுடைய ஆட்டத்தை அரபிக்க உள்ளார்.இனி பாகியவிற்கு என்னவெல்லாம் நடக்க போகின்றது என்பதை வரும் தொடர்களில் காண்பதற்கு ரசிகர்கள் மிகவும் ஆவலாக உள்ளனர்.