ரஹானே அதிரடி ! தோனி குறித்து ருசிகர தகவல்

0
209
#image_title

ரஹானே அதிரடி ! தோனி குறித்து ருசிகர தகவல்

 

16வது ஐபிஎல் தொடரின் 33வது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

 

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரஹானே 71* ரன்களும், டெவன் கான்வே 56 ரன்களும், சிவம் துபே 50 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 235 ரன்கள் குவித்தது.

 

இதன்பின் 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்தி களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு பேட்டிங்கில் துவக்கமே சரியாக அமையவில்லை. இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி 186 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்து 49 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

 

ஆட்டநாயகன் விருது பெற்ற ரஹானே கூறும் போது, நான் எனது திட்டங்களில் தெளிவாக இருந்தேன். எனது விளையாட்டை அனுபவித்து விளையாடுவதே எனது முக்கியமான திட்டம். ஆடுகளம் பந்துவீச்சிற்கு சாதகமாக இருப்பது போன்று தோன்றினாலும், சிறிது நேரம் தாக்குபிடித்துவிட்டால் இலகுவாக ரன் குவிக்கலாம்.

 

எங்களுக்கு துவக்கம் மிக சிறப்பாக அமைந்தது, எனவே தான் நானும் அதிரடியாக விளையாடினேன். நான் விளையாடிய அனைத்து போட்டியும் எனக்கு பிடித்தமானது தான் என்றாலும், எனது பெஸ்ட்டான ஆட்டம் இன்னும் வெளிப்படவில்லை என்றே நான் கருதுகிறேன்.

 

தோனியின் தலைமையின் கீழ் விளையாடுவதால் பல விஷயங்களை சுலபமாக கற்றுக்கொள்ள முடிகிறது. அவரது கேப்டன் பொறுப்பில் நான் இந்திய அணிக்காகவும் விளையாடியுள்ளேன், இப்போது சென்னை அணிக்காக விளையாடி வருகிறேன். அவர் சொல்வதை அப்படியே பின்பற்றினாலே போதுமானது என்று தெரிவித்தார்.