டிராவிட்டை டேவிட் ஆக்கிய பத்திரிக்கை செய்தி… பல ஆண்டு ரகசியத்தைப் பகிர்ந்த ராகுல் டிராவிட்!

0
132

டிராவிட்டை டேவிட் ஆக்கிய பத்திரிக்கை செய்தி… பல ஆண்டு ரகசியத்தைப் பகிர்ந்த ராகுல் டிராவிட்!

இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சமீபத்தில் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

இந்திய அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் பல ஆண்டுகள் சிறப்பாக விளையாடி, ரசிகர்களால் ‘சுவர்’ என்று அன்போடு அழைக்கபடும் ராகுல் டிராவிட் தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பள்ளி நாட்களில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் “நான் பள்ளியில் படிக்கும் போது ஒரு போட்டியில் சதம் அடித்தேன். அது சம்மந்தமான பத்திரிக்கை செய்தியில் என் பெயர் ராகுல் டேவிட் என வந்திருந்தது. ஏனென்றால் ராகுல் டிராவிட் என ஒரு பெயர் இருக்காது என அவர் நினைத்திருபார் போல.

அதன் பிறகுதான் என்பெயரை அனைவருக்கும் தெரியப் படுத்த வேண்டும் என்ற முடிவை நான் உத்வேகத்தோடு எடுத்தேன்” எனக் கூறியுள்ளார். டிராவிட் இந்திய அணிக்காக பல வெற்றிகளை தேடிக் கொடுத்துள்ளதோடு, சில ஆண்டுகள் விக்கெட் கீப்பராகவும் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.