ஆரம்பித்த உடன் ஆட்டத்தை கலைத்த மழை ??  இந்தியா-நியூசிலாந்து போட்டி தொடருமா ??

0
84
Rain that broke the game as soon as it started?? Will the India-New Zealand match continue??

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதில் முதல் போட்டியானது நேற்று பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருந்த நிலையில் பரவலாக மழை பெய்து வந்த காரணத்தால் அந்த போட்டியானது நேற்று நடைபெற வில்லை.

நியூசிலாந்து நீண்ட நாட்களாக இந்திய மண்ணில் விளையாடாமல் இருந்தது. ஆப்கானிஸ்தானில் இன்டர்நேஷனல் மைதானம் இல்லாத காரனத்தால் நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் இடையேயான போட்டி இந்தியாவில் உள்ள நொய்டா மைதானத்தில் நடைபெற இருந்தது. அந்த போட்டியில் மழை பெய்த காரணத்தால் போட்டி நடைபெறவில்லை. இதனை தொடர்ந்து இந்தியாவுடனான டெஸ்ட் தொடரிலும் மழை பெய்ததால் இந்திய மண்ணில் விளையாட முடியாமல் நியூசிலாந்து அணி சோகத்தில் இருந்து.

இன்று (வியாழன்) காலை மழை ஏதும் இல்லாத காரணத்தால் முதல் டெஸ்ட் போட்டியானது தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்  தேர்வு செய்துள்ளது. இந்தியு அணியின் ப்ளையிங் லேவேன்  ரோஹித் சர்மா (கேப்டன்),யஷ்ஷவி ஜெயஷ்வால், விராட் கோலி, சர்ப்ராஸ் கான், கே எல் ராகுல், ரிஷப் பண்ட், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

முதலில் களமிறங்கிய இந்திய அணி வெறும்  13 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இந்த நிலையில் மீண்டும் மழை பெய்ததால் போட்டி நின்றது. இந்த நிலையில் போட்டி தொடருமா அல்லது போட்டி ரத்தாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.