Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மீண்டும் சி எஸ் கே வில் ரெய்னா? ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய புகைப்படம்!

மீண்டும் சி எஸ் கே வில் ரெய்னா? ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய புகைப்படம்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ரசிகர்களின் மனம் கவர்ந்த வீரராக இருந்தவர் சுரேஷ் ரெய்னா. சென்னை அணிக்காக தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அவரை மிஸ்டர் ஐபிஎல் என ரசிகர்கள் அழைத்து வந்தனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே அவருக்கும் சென்னை அணி நிர்வாகத்துக்கும் இடையே சுமூகமான உறவு இல்லாமல் இருந்தது. இதையடுத்து இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் சென்னை அணியால் தக்கவைத்துக் கொள்ளப்படவில்லை.

ஐபிஎல் தொடரின் மெகா ஏலம் கடந்த பிப்ரவரி மாதம் பெங்களூருவில் நடைபெற்றது. இந்த மெகா ஏலத்தில் 600 வீரர்கள் ஏலம் விடப்பட்டு அதில் 204 வீரர்கள் விற்கப்பட்டனர். இந்த மெகா ஏலத்தில் சுரேஷ் ரெய்னாவை எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை. சென்னை அணியாலும் ரெய்னாவை ஏலத்தில் எடுக்க முடியாமல் போனது. இதனால் சென்னை ரசிகர்களுக்கு இது கவலையை ஏற்படுத்தியது.

இதையடுத்து நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சுரேஷ் ரெய்னா கிரிக்கெட் இந்தியில் வர்ணனையாளராக பணியாற்றினார். மேலும் அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஒய்வு பெற்றுவிட்டதாகவும் அறிவித்தார். இந்நிலையில் இப்போது லண்டனில் தோனியை சந்தித்து அவரோடு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். இதனால் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ரெய்னா சி எஸ் கே அணியில் விளையாட வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் ஆருடம் சொல்லி வருகின்றனர்.

Exit mobile version