ஜெய்ஸ்வால், துபே அதிரடி ஆட்டம்.! சென்னையை பந்தாடியது ராஜஸ்தான் ராயல்ஸ்.!!

0
148

ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 47வது லீக் போட்டியில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. அபுதாபியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தனர். இதனைத்தொடர்ந்து சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கெய்க்வாட் மற்றும் டுப்லஸ்ஸிஸ் களமிறங்கினர் இருவரும் சிறப்பான தொடக்கம் அளித்தனர்.

அணியின் ஸ்கோர் 47 ஆக இருந்தபோது டுப்லஸ்ஸிஸ் 25 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். அதன் பிறகு களமிறங்கிய சுரேஷ் ரெய்னா வந்த வேகத்தில் 3 ரன்களுடன் அவரும் அவுட்டானார். அதன் பிறகு வந்த மொயின் அலி மற்றும் அம்பத்தி ராயுடு ஓரளவு ரன் குவித்தாலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்து கொண்டிருந்தாலும் மறுபக்கம் ருத்ர தாண்டவம் ஆடினார் ரிதுராஜ் கெய்க்வாட் இதனை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்களை குவித்தது. இதில் கடைசிவரை ஆட்டமிழக்காமல் கெய்க்வாட் 101 ரன்களும், ஜடேஜா 32 ரன்களும் குவித்தனர்.

190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி தொடக்கம் முதலே அதிரடியில் இறங்கினர் சென்னை பவுலர்களின் பந்துவீச்சை தும்சம் செய்த ராஜஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்கள் 5.2 ஓவர்களில் 77 ரன்கள் குவித்தனர்.

தாக்கூர் பந்துவீச்சில் லெவிஸ் 27 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.அதனைத்தொடரந்து அதிரடியாக ஆடிய மற்றோரு தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் 21பந்துகளில் அரை சதம் எடுத்த நிலையில் ஆசிப் பந்துவீச்சில் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த சஞ்சு சாம்சன் 28 ரன்களுடனுடன் அவுட்டானார். அதன் பின்னர் களமிறங்கிய சிவம் துபே அதிரடியாக ஆடி 42 பந்துகளில் 64 ரன்களும், பிலிப்ஸ் 8 பந்துகளில் 16 ரன்களை குவித்தனர் இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 17.3 ஓவர்களிலேயே 190 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது.