Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ரேஷன் அட்டைதாரர்களே இனி கவலை வேண்டாம்!! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!

#image_title

ரேஷன் அட்டைதாரர்களே இனி கவலை வேண்டாம்!! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!!

வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் மக்கள் அனைவருக்கும் அனைத்து நலத்திட்டங்களும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே ரேஷன் கார்டு அமைப்பு கொண்டுவரப்பட்டது. இதனை அடையாள அட்டையாகவும் தற்பொழுது பயன்படுத்தி வருகிறோம்.

ஆனால் பெரும்பான்மையாக இந்த நலத்திட்டங்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு கிடைப்பதில்லை என்ற புகார் இருந்து வருகிறது. இதனை கண்டறிய தற்பொழுது தமிழக அரசு தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் சொந்த வீடு நான்கு சக்கர வாகனம் ஆண்டிற்கு இரண்டு லட்சத்திற்கும் மேல் வருமானம் பெறுபவர்கள் என அனைவரும் தாங்களாகவே வந்து ரேஷன் அட்டையை ஒப்படைக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க மகளிருக்கான ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டமானது தற்பொழுது அண்ணா பிறந்தநாள் அன்று செயல்பட உள்ளது. இதனை பெறுவதற்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் ரேஷன் அட்டையை விண்ணப்பித்து வாங்கி வருகின்றனர்.

இதனை கண்டறியவும் தமிழக அரசு குழு ஒன்றை அமைத்த ஒரே வீட்டில் வசிக்கும் தாய் தந்தை மகன் மற்றும் மருமகள் என இருந்தால் அவர்களுக்கு தனித்தனி சமையலறை இருக்க வேண்டும் என்றும் தனி வீடு இருக்க வேண்டும் என்றும் மேற்கொண்டு ரேஷன் அட்டை இருப்பவர்களின் பெயரில் சிலிண்டர் இணைப்போம் இருப்பது கட்டாயம் எனக் கூறியுள்ளனர்.

இவ்வாறு இருப்பவர்களுக்கு மட்டுமே தனி ரேஷன் கார்டு என தெரிவித்துள்ளனர். ஒரு பக்கம் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிப்பவர்களை கண்காணித்தல் மறுபக்கம் வறுமை கோட்டிற்கு கீழ் இல்லாத மக்களிடம் இருந்து ரேஷன் கார்டை பெறுதல் என்று துரிதமாக செயல்பட்டு வரும் இந்த வேளையில் ரேஷன் கடைகளில் கட்டாயப்படுத்தி பொருள்களை வாங்க சொல்வதாக தற்பொழுது புகார் எழுந்துள்ளது.

எந்த ஒரு ரேஷன் கடைகளிலும் மக்களிடம் கட்டாயப்படுத்தி பொருள்களை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு ஆணையிடவில்லை. அவர்கள் விரும்பும் பொருட்களை மட்டுமே வாங்கி செல்லலாம்.

இவ்வாறு இருக்கும் பட்சத்தில் விருப்பம் இல்லாத பொருட்களை வாங்க சொல்வதும் அவ்வாறு வாங்கவில்லை என்றால் உங்களது ரேஷன் அட்டை ரத்து செய்யப்படும் என கூறுவது தற்பொழுது அதிகரித்துள்ளது.

எனவே பொதுமக்கள் இதனை நம்ப வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை மட்டும் வாங்கி செல்லலாம் என்றும் கூறியுள்ளனர். மேற்கொண்டு இதுபோல ரேஷன் கடை ஊழியர்கள் யாரேனும் கூறினால் அவர்கள் மீது புகார் அளிக்கும்படி தெரிவித்துள்ளனர்.

Exit mobile version