Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

”ஒரு நாள் போட்டிகளைப் பார்ப்பதையே நிறுத்திவிட்டேன்…” அஸ்வின் அதிரடி கருத்து!

”ஒரு நாள் போட்டிகளைப் பார்ப்பதையே நிறுத்திவிட்டேன்…” அஸ்வின் அதிரடி கருத்து!

இந்திய அணியின் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளர் அஸ்வின் இப்போது லிமிடெட் ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் தேர்வு செய்யப்படுவதில்லை.

இந்திய அணியில் நட்சத்திர பவுலராக வலம் வந்துகொண்டிருந்தவர் ரவிச்சந்திரன் அஸ்வின். உலகக்கோப்பையை வென்ற 2011 ஆம் ஆண்டு இந்திய அணியிலும் அவர் இடம்பெற்றிருந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கு லிமிடெட் ஒவர் கிரிக்கெட் போட்டிகளில் வாய்ப்பளிக்க படவில்லை. அதனால் டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்தி அதில் முன்னணி பவுலராக இருந்து வருகிறார். கடைசியாக அவர் 2021 ஆம் ஆண்டு டி 20 உலகக்கோப்பை தொடரில் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் இப்போது அவர் தான் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளையே பார்ப்பதை நிறுத்திவிட்டதாக ஒரு போட்காஸ்ட் ஒன்றில் கூறியுள்ளார். அதில் “எப்போது ஒருநாள் போட்டிகளில் இருமுனைகளில் இருந்து வெவ்வேறு பந்துகளில் வீசலாம் என்று சொல்லப்பட்டதோ அப்போதே ஒருநாள் கிரிக்கெட் அப்போதே நான் அதைப் பார்ப்பதை நிறுத்திவிட்டேன். இப்போது ஒருநாள் கிரிக்கெட் டி 20 கிரிக்கெட்டின் நீட்சியாகிவிட்டது.

இதனால் ரிவர்ஸ் ஸ்விங் என்பதே இல்லாமல் போய்விட்டது. இந்த முறை நிறுத்தப்பட்டால்தான் சுழல் பவுலர்களுக்கு வாய்ப்பு இருக்கும். அவர்களால் இறுதி ஓவர்களில் வீசமுடியும். ஒருநாள் போட்டிக்கு ரிவர்ஸ் ஸ்விங் முக்கியமானது” எனக் கூறியுள்ளார்.

Exit mobile version