Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

போட்டியில் விளையாண்டால் கைகள் இருக்காது!அஸ்வினை மிரட்டிய எதிரணியினர்!

போட்டியில் விளையாண்டால் கைகள் இருக்காது!அஸ்வினை மிரட்டிய எதிரணியினர்!

இந்திய அணியின் டாப் ஸ்பின்னர்களில் ஒருவரான ரவிச்சந்திரன் அஸ்வின் சிறுவயதில் தான் மிரட்டப்பட்ட சம்பவம் பற்றி இப்போது பேசியுள்ளார்.

டெஸ்ட் அணியில் இந்திய இந்திய அணி பல சாதனைகள் புரிய முக்கியக் காரணமாக விளங்கி வருபவர் தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின். பந்துவீச்சில் மட்டும் இல்லாமல் பேட்டிங்கிலும் கலக்கி வரும் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக விளங்கி வருகிறார். மூன்று விதமான போட்டிகளிலும் விளையாடிக் கொண்டு இருந்த அவர் இப்போது டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார்.

நியுசிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்ள இருக்கும் ஆயத்தமாகி வரும் அஸ்வின் சிறுவயதில் தான் மிரட்டப்பட்ட சம்பவம் பற்றி ரகசியம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் அளித்த நேர்காணல் ஒன்றில்’ நான் 14 வயது சிறுவனாக இருந்த போது எங்க அணிக்காக ஒரு போட்டியில் விளையாட இருந்தேன். நாளை போட்டி நடக்க இருந்த நிலையில் என்னை சிலர் வந்து சந்தித்து ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று உணவுப் பொருட்களை வாங்கிக் கொடுத்தனர்.

நான் அதை சாப்பிட்டுக் கொண்டு இருக்கும்போது அடுத்தநாள் நடக்க இருக்கும் போட்டியில் நீ விளையாடக் கூடாது; மீறி விளையாடினால் இனி உனக்கு பந்துவீச கை இருக்காது என மிரட்டினர். அவர்களின் மிரட்டலுக்குப் பயந்து நான் விளையாட மாட்டேன் என உறுதி அளித்த பின்னரே, அவர்கள் என்னை விட்டு சென்றனர்.’எனத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version