விராட் கோலி அதிரடி ஆட்டம்! குஜராத்தை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது பெங்களூரு அணி!

Photo of author

By Sakthi

கடந்த மாதம் தொடங்கிய ஐபிஎல் கிரிக்கெட்டின் 15-ஆவது சீசன் மிக பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது எந்த அணி இந்த முறை ஐபிஎல் தொடரை வென்று கோப்பையை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு தற்சமயம் அதிகரித்திருக்கிறது.

இந்த நிலையில், மும்பை வான்கடே மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் குஜராத் அணி மற்றும் பெங்களூரு அணிகள் சந்தித்தனர், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதனடிப்படையில், முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் சேர்த்தது. ஹர்திக் பாண்டியா 62 ரன்னும், டேவிட் மில்லர் 34 ரன்னும், விருத்திமான் சஹா 31 ரன்னும், சேர்த்தனர்.

பெங்களூர் சார்பாக 2 விக்கெட் மேக்ஸ்வெல், ஹசரங்கா, உள்ளிட்டோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

இதனைத்தொடர்ந்து 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி இருவரும் அதிரடியாக விளையாடினார். பொறுப்புடன் விளையாடிய விராட் கோலி அரைச்சதமடித்தார்.

அணியின் எண்ணிக்கை 115 ஆக இருந்தபோது டுப்லஸ்ஸிஸ் 44 ரன்களில் வெளியேறினார், இவரை தொடர்ந்து 73 ரன்கள் எடுத்த நிலையில் விராட் கோலி ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக களமிறங்கிய மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி 18 பந்தில் 40 ரன்களை சேர்த்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

கடைசியில் பெங்களூரு அணி 18.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது இதன் மூலமாக பிளே ஆப் சுற்றையும் அந்த அணி தக்க வைத்தது.

Exit mobile version