Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆர்.சி.பி அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதியான அணி கிடையாது! கேப்டன் பாப் டுபிளிஸ் கருத்து!!

#image_title

ஆர்.சி.பி அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதியான அணி கிடையாது! கேப்டன் பாப் டுபிளிஸ் கருத்து!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தகுதியான அணி கிடையாது என்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டுபிளிசிஸ் கூறியுள்ளார்.

இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று முதல் பிளே ஆப் சுற்றுகள் நடைபெறவுள்ளது. இன்று அதாவது மே 23ம் தேதி சென்னையில் நடைபெறும் முதல் குவாலிபையர் சுற்றில் குஜராத் மற்றும் சென்னை அணிகள் விளையாடவுள்ளது. நாளை அதாவது மே 24ம் தேதி சென்னையில் நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் மோதவுள்ளது. இந்த நிலையில் ஆர்.சி.பி அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதியான அணி இல்லை என்று அந்த அணியின் கேப்டன் பாப் டுபிளிசிஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் பாப் டுபிளிசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 போட்டிகளில் வெற்றி பெற்று கடைசி லீக் போட்டியில் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு சென்று விடலாம் என்றிருந்த நிலையில் கடைசி லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தோல்வி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு தகுத பெறும் வாய்ப்பை இழந்து ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறியது.

இது குறித்து ஆர்.சி.பி அணியின் கேப்டன் பாப் டுபிளிசிஸ் “உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இந்த தெடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சிறந்த அணிகளில் ஒன்றான அணியாக இல்லை. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடிய 14 போட்டிகளை திரும்பி பார்த்தால் நாங்கள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதியான அணியே கிடையாது என்பதை அறிய முடிகிறது. இருந்தாலும் வெற்றிக்காக கடுமையாக உழைத்தோம். நெருங்கி வந்து வீழ்ந்துவிட்டோம்” என்று கூறியுள்ளார்.

 

 

 

 

 

 

Exit mobile version