CRICKET: சம்பளமே இல்லையென்றாலும் பரவாயில்லை தொனியுடன் விளையாடினால் போதும் ஸ்டெய்ன்.
இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளில் மிகப்பிரபலமான போட்டி ஐ பி எல் போட்டி தொடர். இந்த தொடருக்கான ஐ பி எல் மெகா ஏலம் இந்த மாத கடைசியில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியானது 2025 ல் மார்ச் ஏப்ரல் மே மாதங்களில் நடைபெறவுள்ளது.
இந்திய அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்ற முதல் போட்டியிலேயே முதல் டி 20 உலகக்கோப்பையை பெற்று தந்தவர் எம் எஸ் தோனி. அவர் தற்போது அனைத்து வகையான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்று தற்போது ஐ பி எல் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.
எம் எஸ் தோனி கேப்டனாக இருந்த csk அணி இதுவரை 10 முறை இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளது. 5 முறை கோப்பையை வென்றுள்ளது. இந்நிலையில் தென்னாப்பிரிக்க வீரர் டேல் ஸ்டெயின், நான் எனது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதிலும் எம் எஸ் தோனியின் ரசிகனாகவே இருக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
டேல் ஸ்டெயின் பேட்டி ஒன்றை சமீபத்தில் அளித்துள்ளார். அந்த பேட்டியில் நான் எம் எஸ் தோனியின் மிகப்பெரிய ரசிகன். நான் அவரது தலைமையில் விளையாட வாய்ப்பு கிடைத்தால் சம்பளம் குறைவாக இருந்தாலும், சம்பளம் இல்லாவிட்டாலும் விளையாட தயார். அவர் அணியில் இடம்பெறும் போது விக்கெட் கீப்பர் மற்றும் பவுலர் இடையே ஒரு நல்ல உறவு இருக்கும் அதை நான் விரும்புகிறேன்.
மேலும் சர்வதேச மற்றும் ஐ பி எல் போட்டிகளில் கோப்பையை வெல்ல அணிகளுக்கு பயிற்சி அளிக்க நான் விரும்புகிறேன். அதை நான் தோனியிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன் என்றும் அவர் கூறினார்.