இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது முதல் போட்டியில் 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதற்கு முக்கிய காரணம் இந்திய அணியின் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் இவர் 1 07 ரன்கள் எடுத்து சதம் விளாசினார்.
இந்த வெற்றியின் பின் நேற்று தொடங்கிய இரண்டாவது போட்டியில் இரண்டாவது சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 3 பந்துகளை சந்தித்து ரன் அடிக்காமல் டக் அவுட் ஆனார். இதனால் ஒரே ஆண்டில் அதிக முறை டி 20 போட்டிகளில் டக் அவுட் முதல் இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன் இந்திய வீரர்கள் ரோஹித் சர்மா 2018 ல் 3 போட்டிகளில் டக் அவுட் ஆனார், விராட் கோலி 2024 இந்த ஆண்டு 3 முறையும் டக் அவுட் ஆகியுள்ளனர். இதனை தொடர்ந்து ஒரு ஆண்டில் 4 முறை டக் அவுட் ஆகி,இரண்டு முறை சதம் அடித்த விசித்திரமான சாதணையை செய்துள்ளார் சஞ்சு சாம்சன்.