பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாதனை படைத்த பாகிஸ்தான் அணி. சொந்த மண்ணில் தோல்வியை அடைந்த ஆஸ்திரேலிய அணி. இந்த வெற்றியின் மூலம் வரலாற்று சாதனை ஒன்றை படைத்துள்ளது பாகிஸ்தான்.
பாகிஸ்தான் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது முதல் போட்டியில் இரண்டு அணிகளும் முட்டி மோதின எனினும் ஆஸ்திரேலியா அணி தனது சொந்த மண்ணில் முதல் வெற்றியை பதிவு செய்தது.
இன்று தொடங்கிய இரண்டாவது போட்டியில் முதலில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்றது. டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. 35 ஓவருக்கு 163 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.இதில் ஹாரிஸ் ராஃப் 5 விக்கெட்டுகளும், ஷஹீன் அப்ரிடி 3 விக்கெட்டுகளும் எடுத்தார்.
இதனை தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி தொடக்க வீரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்து வெற்றி இலக்கை எளிதாக அடைந்தனர். 26.3 ஓவருக்கு 169 ரன்கள் எடுத்து எலிதான் அபார வெற்றியை பதிவு செய்தது. பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் இதற்கு முன் 1996 ல் கடைசியாக வெற்றி பெற்றது அதன் பின் தற்போது அந்த சாதனையை உடைத்துள்ளது.