தமிழக ரயில்களில் பெட்டிகள் குறைப்பு!! அதிர்ச்சியில் ரயில் பயணிகள்!!

0
146
Reduction of coaches in Tamil Nadu trains!! Train passengers in Athirsi!!

தமிழக ரயில்களில் பெட்டிகள் குறைப்பு!! அதிர்ச்சியில் ரயில் பயணிகள்!!

தமிழகத்தில் உள்ள 7 முக்கியமான ரயில்களில் இரண்டாம் வகுப்பு பெட்டிகள் குறைக்க படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் ஏசி பெட்டிகளை அதிகரிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள்.மேலும் பல்வேறு பகுதியில் இருந்து வருபவர்களுக்கு இந்த ரயில் பயணம் மிகவும் சவுகரியமாக அமைகின்றது.

இதனால் ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை எடுத்து வருகின்றது.இதன் படி தமிழக அரசு 7 முக்கியமான ரயில்களில் இரண்டாம் வகுப்பு பெட்டிகளை குறைக்க திட்டமிட்டுள்ளது.

குறைக்கப்பட்ட இரண்டாம் வகுப்பு பெட்டிகளுக்கு பதிலாக ஏசி பெட்டிகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

இதன்படி மன்னார்குடியில் இருந்து ராஜஸ்தான் நோக்கி செல்லும் ரயில்களில் மொத்தம் மூன்று இரண்டாம் வகுப்பு பெட்டிகள் உள்ளது.இந்த பெட்டிகள் அனைத்தும் குறைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து குறைக்கப்பட்ட மூன்று  பெட்டிகளுக்கு பதிலாக நான்கு ஏசி பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இவற்றில் 11 ஏசி பெட்டிகளும் 7  இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகளும் இருக்கும்.இந்த மாற்றங்கள் அனைத்தும் ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டே செய்யப்பட்டது.

இவ்வாறு ரயில் பெட்டிகளில் செய்யப்பட மாற்றங்கள் இந்த மாதம் இறுதிக்குள் இல்லையென்றால் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் 7 முக்கியமான ரயில்களில் இரண்டாம் வகுப்பு பெட்டிகள் குறைக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.