cricket: இந்திய அணியின் முக்கிய வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஓய்வு குறித்து உண்மையை உடைத்த ரவிசாஸ்த்ரி.
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 5 போட்டிகளில் விளையாடி வருகிறது. மேலும் இந்த தொடரில் ஏற்கனவே 3 போட்டிகள் நடந்த முடிந்த நிலையில் தற்போது நேற்று நடந்து முடிந்த 4 வது போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது.
இதில் முக்கிய வீரர்களான ரோகித் மற்றும் விராட் இருவரும் தொடர்ந்து சொதப்பி வருகின்றனர். இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இதுவரை 5 இன்னிங்ஸில் களமிறங்கி 31 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். தொடர்ந்து அனைத்து ஆட்டங்களிலும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்கிறார். விராட் கோலி முதல் போட்டியில் மட்டும் சதம் விளாசினார். அதன் பின் அவர் வழக்கத்தை தொடர ஆரம்பித்தார்.
இவ்வாறு இருக்க இந்திய அணி ரசிகர்கள் பலரும் அவர்கள் இருவரும் எப்போது ஓய்வு பெறுவார்கள் என கேள்வி எழுப்பி வந்த நிலையில் இந்திய அணியின் வர்ணனையாளர் ரவிசாஸ்திரி உண்மையை உடைத்துள்ளார். விராட் கோலி அவுட் ஆகும் முறை தான் தவறு அவர் அதை திருத்தி கொள்ள வேண்டும். அவர் இன்னும் 3 முதல் 4 ஆண்டுகள் வரை விளையாடுவார். ரோஹித் சர்மா அவரால் முன்பு போல் வேகமாக செயல்பட முடியவில்லை. அவரின் ஓய்வு இந்த தொடர் முடிந்த பின் அவர் முடிவு செய்து அறிவிப்பார் என்று அவர் கூறியுள்ளார்.