இராணுவத்தில் பணி செய்ய விருப்பமா? வந்தாச்சு அப்டேட்…விண்ணப்பக் கட்டணம் இல்லை

0
142

இராணுவத்தில் பணி செய்ய விருப்பமா? வந்தாச்சு அப்டேட்…விண்ணப்பக் கட்டணம் இல்லை

உலக அளவில் நிலவும் பெரும் பிரச்சனைகளில் ஒன்று வேலை வாய்ப்பின்மை.குறிப்பாக இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகமான நாடுகளில் மிகப்பெரும் பிரச்சனையாக உள்ளது வேலைவாய்ப்பின்மை.

சமீபத்திய ஆய்வுகளில் வேலையின்மையின் காரணமாக தற்கொலை நிகழ்வதில் இந்தியா முக்கிய இடம் வகிப்பதாக தெரிவிக்கின்றது.அந்தவகையிலே இந்தியாவில் ஒவ்வொரு வேலை வாய்ப்பும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

நெடுங்காலமாகவே தமிழக இளைஞர்கள் இந்திய இராணுவத்தில் பணியாற்ற மிகவும் விருப்பம் கொண்டவர்களாக இருந்து வருகின்றனர்.

தற்போது இந்திய இராணுவத்தில் பணிசெய்ய விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சென்னை இராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. இதில் ஸ்டோர் கீப்பர்,சிப்பாய்,எழுத்தர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழக்தில் உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் இருந்தும் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தை சார்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிக்கு 01-03-2020 முதல் 31-03-2020 வரை இனையவழியில் www.joinindianarmy.nic.in என்ற இனையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி மைதானத்தில் 15-04-202 முதல் 25-04-2020 வரை ஆட்சேர்ப்பு முகாம் நடைபெரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் கடினமான உழைப்பால் மட்டுமே இந்திய இராணுவத்தில் சேரமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.