ரேஷன் அட்டைகளில் பெயர் நீக்கம் செய்ய புதிய கட்டுப்பாடு!! தமிழக அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!

0
111
Restriction to delete name on ration cards!! Shocking information released by the Tamil Nadu government!!

ரேஷன் அட்டைகளில் பெயர் நீக்கம் செய்ய புதிய  கட்டுப்பாடு!! தமிழக அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!

ரேஷன் அட்டைகள் மூலம் பொதுமக்கள் அனைவரும் மலிவான விலையில் பொருட்களை வாங்கி பயன்பெற்று வருகின்றனர். ரேஷன் கடைகளில் பருப்பு, எண்ணெய்,சர்க்கரை போன்ற பொருட்கள் மிகவும் குறைந்த விலையிலும் மற்றும் அரசி இலவசமாகவும் வழங்கப்பட்டது.

இதனால் இந்திய முழுவதும் பல கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்கள் அனைவரும் ரேஷன் கடைகளின் மூலமாகவே மலிவான பொருட்களை வாங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பதலைவிகளுக்கு ரூ.1000 என்ற உதவித்தொகை வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.அதற்கான ஆவணங்களை சரி பார்க்கும் பணி நடைபெற்று கொண்டு வருகின்றது.

இந்த உதவித்தொகை வழங்கும் திட்டமானது வருகின்ற செப்டம்பர் 15 ம் தேதி அண்ணா பிறந்த நாளையொட்டி செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த உதவித்தொகை பெற விரும்பும் குடும்பதலைவிகள் அனைவரும் கட்டாயம் ரேஷன் அட்டை வைத்திருக்க வேண்டும். இதற்கான உதவித்தொகை பெறுவதற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இப்பொழுது தமிழகத்தில் அதிக அளவில் ரேஷன் அட்டைகளில் பெயர் திருத்தம் செய்தல் ,குடும்ப உறுப்பினர் பெயரை இணைத்தல், பிறந்த தேதி மாற்றுதல் , முகவரி மாற்றம் செய்தல் போன்ற பல்வேறு திருத்தங்களை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.

அதன் தொடர்பாக மகளிருக்கு உதவித்தொகை தரும் பணி முடியும் வரை பெயர் நீக்குதல் ,மாற்றம் செய்தல் போன்ற அனைத்திற்கும் உயர் அதிகாரிகளிடம் ஒப்புதல் பெற்ற பின்னர் அந்த பணியை மேற்கொள்ள வேண்டும் என்று வட்ட வழங்கல் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.