Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிரபல விளையாட்டு வீரர்களுக்கு கொடுத்த பதிலடி! கண்டனம் தெரிவித்த இந்திய டென்னிஸ் சங்கம்!

Retaliation for famous athletes! Indian Tennis Association condemns

Retaliation for famous athletes! Indian Tennis Association condemns

பிரபல விளையாட்டு வீரர்களுக்கு  கொடுத்த பதிலடி! கண்டனம் தெரிவித்த இந்திய டென்னிஸ் சங்கம்!

டோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டிக்கு பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் அங்கீதா ரைனா அணி தகுதி பெற்றுள்ளது. சில வீரர்கள் விலகியதை அடுத்து சுமித் நாகலுக்கு ஒற்றையர் பிரிவில் கலந்து கொள்ளும் அதிர்ஷ்ட வாய்ப்பு கிடைத்தது. ஆண்கள் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் விளையாடும் வாய்ப்பைப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய முன்னணி வீரர், ரோகன் போபன்னாவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இந்த நிலையில் இரட்டையர் பிரிவில் நான் தகுதி பெறும் விஷயத்தில் அகில இந்திய டென்னிஸ் சங்கம் சரியாக நடந்து கொள்ளவில்லை என்றும், உலக இரட்டையர் தரவரிசையில் 41வது இடம் வகிக்கும் ரோகன் போபண்ணா குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில் இரட்டையர் பிரிவு என்னையும் சுமித் நாகுலையும் அகில இந்திய டென்னிஸ் சங்கம் பரிந்துரை செய்ததை, சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் ஏற்றுக்கொள்ளவில்லை.

பரிந்துரைக்கு பிறகு காயம் மற்றும் உடல்நலக்குறைவு தவிர வேறு எந்த காரணத்துக்காகவும் செய்யப்படும், பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்பதை சம்மேளனம்  தெளிவாக தெரிவித்து இருக்கிறது. இருப்பினும், இந்த விஷயத்தில் வீரர்கள் அரசு உட்பட அனைத்து தரப்பினரையும் அகில இந்திய டென்னிஸ் சங்கம் தவறாக வழிநடத்துகிறது என்று மேலும் அப்பட்டமாக கூறியிருந்தார்.

முதலில் இரட்டையர் பிரிவு ரோகன் போபண்ணா ஜோடி பெயர் சிபாரிசு செய்யப்பட்டு பிறகு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.போபண்ணாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த இந்திய வீராங்கனை சானியா மிர்சா, இது உண்மையாக இருந்தால் நமக்கு வெட்கக்கேடானது நாங்கள் திட்டமிட்டபடி கலப்பு இரட்டையர் பிரிவில் விளையாட முடியாமல் போனதால் பதக்கம் வெல்லும் நல்ல வாய்ப்பை தியாகம் செய்துள்ளோம் என கருதுகிறேன், என்று குறிப்பிட்டிருந்தார்.

போபண்ணா, சானியா ஆகியோரின் புகாருக்கு அகில இந்திய டென்னிஸ் சங்கம் பதிலடி கொடுத்துள்ளது. அதன்பின் போபண்ணா சானியா ஆகியோர் உண்மை நிலவரம் தெரியாமல் முறையற்ற தங்களது கருத்துக்களை தெரிவிக்க கூடாது. என்றும் அவர்கள் சர்வதேச டென்னிஸ் சங்க விதிமுறைகளை சரியாக படித்து பார்க்க வேண்டும். மேலும் அவர்களின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கண்டனத்துக்குரியதாகும்.

ரோகன் போபண்ணாவின் தரவரிசை  திவிஜ் சரண் அல்லது சுமித் நாகலுடன் ஒலிம்பிக்குக்கு தகுதி பெறுவதற்கு போதுமானதாக இல்லை என்பது எங்களுக்கு தெரியும். எந்த ஒரு பிரிவிலும் பதக்கம் வெல்லும் வாய்ப்பை எப்படி இழக்க  விரும்புவோம். நாங்கள் மேலும் எல்லா வகையிலும் இதற்கான முயற்சிகளை செய்தோம் ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு இடையே இந்திய டென்னிஸ் சங்க பொதுச்செயலாளர் அவருடன் பேசிய உரையாடலை பதிவு செய்து போபண்ணா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான ஒழுங்குநெறி கமிட்டிக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று டென்னிஸ் சங்கம் கூறியுள்ளது.

Exit mobile version