Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்திய அணியின் வேக பந்துவீச்சாளருக்கு ஓய்வு.. ஆஸ்திரேலிய அணிக்கு இதுதான் வாய்ப்பா?? மாற்று வீரர் யார்??

Retirement for fast bowler of Indian team

Retirement for fast bowler of Indian team

Cricket : இந்திய அணியின் ஏகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜிக்கு ஓய்வு அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகி வருகிறது.

இந்திய அணி வருகிற 26 ஆம் தேதி ஆஸ்திரேலியா உடனான நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ள நிலையில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜிக்கு ஓய்வு அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த டெஸ்ட் போட்டி தொடரில்  முதல் மூன்று போட்டியில் நடந்து முடிவடைந்தது. இதில் முதல் இரு போட்டிகளில் இரு அணிகளும் ஒரு ஒரு போட்டியில் வென்று சம நிலையில் இருந்த நிலையில் மூன்றாவது போட்டி சமணில் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் ரசிகர்கள் முழு  எதிர்ப்பார்ப்பும் நான்காவது போட்டியின் பக்கம் திசை திரும்பி உள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் வீரர்களுக்கு அச்சம் கொடுக்கும் முகமது சிராஜ் நான்காவது போட்டியில் ஓய்வு அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் அவருக்கு மாற்று வீரராக அணியின்ப்ளேயிங் லெவனில் நிதிஷ் ராணா இடம் பெற்று பந்து வீசுவர் என தகவல் வெளியாகி உள்ளது. இது இந்திய அணிக்கு பின்னடைவாக இருக்குமா? இதனை பயன்படுத்தி ஆஸ்திரேலியா அணி சாதகமாக பயன்படுத்திக் கொள்ளுமா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Exit mobile version