“50” ஓவர்களை கொண்ட”ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டி” அடுத்த ஆண்டு “பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9 தேதி” வரை நடக்க உள்ளது. இந்த போட்டி “பாகிஸ்தானில்” உள்ள “கராச்சியில்” நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தொடரில், இந்திய அணி விளையாட மறுத்து, போட்டியை “துபாயில்” நடத்துமாறு கோரிக்கை வைத்துள்ளது. இதனை ஏற்க “பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்” மறுத்து விட்டது. இந்நிலையில் பாகிஸ்தான் சென்று விளையாட இந்திய வீரர்கள் மறுப்பு தெரிவித்திருக்கின்றனர். பாகிஸ்தானில் “அரசியல் கலவரம்” தொடர்ந்து நடந்து வருகிறது, இதனை கருத்தில் கொண்டு தான் இந்திய அணி வீரர்கள் அங்கு செல்ல மறுத்து விட்டனர்.
சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் “இந்தியா விளையாட வில்லை” என்றால் ஏறக்குறைய “சுமார் 800 கோடி” அளவிற்கு வருவாய் இழப்பை “ஐசிசி மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு” சந்திக்கும் என தெரிய வந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு “ஐசிசி – பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும்” பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்த “ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், இந்தியா போன்ற நாடுகள் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் “ஒரு நாள் போட்டிக்காக” பாகிஸ்தான் சென்றிருந்தது “இலங்கை அணி”. “3” ஒருநாள் கொண்ட இந்த போட்டியில், “முதல் நாள் போட்டி” முடிந்த நிலையில்” பாகிஸ்தானில் அரசியல் வன்முறை பெரிதாகியது, இதனால் இலங்கை அணி பாதியிலேயே பாகிஸ்தானிலிருந்து விளையாட்டை முடித்துக் கொண்டு “வெளியேறியது” கவனத்திற்குரியது.
இந்தியாவை தொடர்ந்து “பல நாட்டு கிரிக்கெட் வாரியங்களும்”, பாதுகாப்பை குறித்து தங்களது கோரிக்கைகளையும், அச்சத்தையும் தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் “ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டி” குறிப்பிட்ட காலத்தில் நடக்குமா என்ற கேள்வியும், எங்கே நடத்தப்படும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது நிலையில், இன்று இதற்கான பேச்சுவார்த்தையை “ஐசிசி கூட்டமைப்பு” நடத்தி வருகிறது.