இந்தியா-நியூசிலாந்து இடையிலான மூன்றாவது போட்டியில் அதிவேக அரைசதம் அடித்ததன் மூலம் வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட். நியூசிலாந்து அணிக்கு எதிராக அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று சொந்த மண்ணில் 12 ஆண்டுகளாக தோல்வியை சந்திக்காத இந்திய அணியின் சாதனையை முறியடித்துள்ளது நியூசிலாந்து அணி
இந்நிலையில் நேற்று தொடங்கிய இந்த தொடரின் கடைசி போட்டியானது மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து களமிறங்கியது. முதல் இன்னிங்ஸ் முடிவில் 235 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இரண்டாவதாக களமிறங்கி இந்திய அணி முதல் நாள் முடிவில் 86 ரன்களில் 4 விக்கெட் இழந்தது.
இன்று தொடங்கிய இரண்டாம் நாள் போட்டியில் இந்திய அணி வீரரான ரிஷப் பண்ட் 36 பந்துகளில் அரைசதம் விளாசினார். இதனால் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் அதிவேக அரைசதம் அடித்து சாதனை படைத்தார். இதற்கு முன் ஜெய்ஸ்வால் 41 பந்துகளில் அரைசதம் விளாசியிருந்தார். தற்போது களத்தில் சுப்மன் கில் மற்றும் ஜடேஜா விளையாடி வருகின்றனர். மூன்றாவது போட்டியில் ஆறுதல் வெற்றி பெறுமா இந்திய அணி??