சென்ற 2007 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட டி20 போட்டிகளுக்கான உலக கோப்பை தொடர் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதுவரையில் 6 டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து இருக்கிறது. இதில் 2007ஆம் வருடம் நடந்த முதல் தொடரில் இந்திய அணி கோப்பையை தட்டிச் சென்றது.இதற்கிடையில் சென்ற வருடம் நடைபெற இருந்த டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நோய்த்தொற்று காரணமாக, ஒத்திவைக்கப்பட்டது. ஒட்டு மொத்தமாக 16 அணிகள் பங்குபெறும் இந்த டி20 உலக கோப்பை தொடர் எதிர்வரும் அக்டோபர் மாதம் 17ஆம் தேதி ஆரம்பித்து நவம்பர் மாதம் 14ஆம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது.
நோய் தொற்று அச்சுறுத்தல் காரணமாக, டி20 உலக கோப்பை தொடரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெற இருக்கிறது. டி20 உலகக் கோப்பைக்கான அனைத்து அணிகளும் மிக தீவிரமாக தங்களை தயார்படுத்தி வருகிறார்கள் டி20 உலகக் கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற தீவிர முயற்சியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இருக்கிறார். ஆகவே அணி வீரர்களை தேர்வு செய்வதில் மிகவும் கவனம் செலுத்தி வருவதாக சொல்லப்படுகிறது.
இந்தநிலையில் டி20 உலக கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை முன்னாள் வீரர் விரிந்தர் சோதி தேர்வு செய்திருக்கிறார். விரிந்தர் சோதி தேர்வு செய்த இந்திய அணி வருமாறு ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், ஷிகர் தவான், சூரியகுமார், ரிஷாப் பண்ட், ஹர்திக் பாண்டியா, தீபக் சாஹர், புவனேஸ்வர் குமார், உள்ளிட்டோரை அடக்கியதாகுயதாகும்.